ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திலிருந்து, நட்புக்கு சாட்சியாக அழுத்தமான வரிகளுடன் வந்துள்ளது முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி” பாடல்.

இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர்
பாடியவர்: ஐரா உடுப்பி
பாடலாசிரியர்: மதுரகவி

பாடல் லிங்க் 

YouTube player

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த புதுமையான ஆக்சன் உலகைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது‌.

முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பார்வையாளர்கள் சலாரின் இசை உலகத்தை தரிசிக்க ஆர்வத்துடன் காத்திருந்தார்கள், இந்நிலையில் தற்போது, தயாரிப்புத் தரப்பு சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் #சூரியனகுடையாநீட்டி பாடலை வெளியிட்டுள்ளனர்.

மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் இப்படத்தின் உணர்ச்சிகரமான பக்கத்தை பற்றிய ஒரு அறிமுகத்தை இந்த சிங்கிள் பாடல் நமக்கு வழங்குகிறது, மேலும் இது ஒருவரின் முழுபலமாகவும் அதே நேரம் பலவீனமாகவும் இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுகிறது. இப்பாடல் படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, இப்படம் வெறும் ஆக்‌ஷன் திரைப்படமாக மட்டுமல்லாமல், இரண்டு சிறந்த நண்பர்களின் பின்னணியில் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் மிகவும் உணர்ச்சிகரமான திரைப்படமாக இருக்குமென உறுதியளிக்கிறது.

2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் பல இரத்தக்களரியான ஆக்சன் காட்சிகள், வன்முறை மிகுந்த அதிரடி காட்சிகள் நிறைய உள்ளது. ‘ஏ’ சர்டிபிகேட் எனும் முத்திரையே படத்தின் ஆக்சன் அளவை பிரதிபலிக்கிறது.

ஹொம்பாலே பிலிம்ஸ், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Here can be your custom HTML or Shortcode

This will close in 0 seconds