நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் பான் இந்தியா படமான ‘சுயம்பு’வுக்காக குதிரை யேற்றம் கற்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளர் கதாநாயகி சம்யுக்தா! இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் தனது இருபதாவது படமான ‘சுயம்பு’வில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சி எடுத்தார் நடிகர் நிகில். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அவரின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும்.

அவருடன் நடிகை சம்யுக்தாவும் சில சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதற்காக குதிரையேற்றம் கற்கும் பயணத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எனது அடுத்த படமான ‘சுயம்பு’வுக்காக நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுப் பயணம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் குதிரையுடன் இணக்கமாக பழகி இந்தப் பயணத்தை கற்று வருகிறேன். இதற்காக ஒரு குழுவாக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவது அழகாகவும் இருக்கிறது” என்றார்.

தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான தயாரிப்புடன் ‘சுயம்பு’ படம் உருவாகிறது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நிகில் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.