தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.  இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நடிகை சமந்தா தான் விஜய்க்கு இப்படத்தில் ஜோடி என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள நிலையில், தளபதி 69 மூலம் இந்த ஜோடி 4வது முறையாக திரையில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது. 

கமலின் படத்தை இயக்கவிருந்த ஹெச் வினோத், அதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது. விஜய்யை வைத்து பொலிட்டிக்கல் ஜானரில் முன்பே கூறியிருந்த கதையை விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒட்டி வினோத் அரசியல் கதையை தூசு தட்டி எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தளபதி 69 படத்தின் இசையமைப்பாளர் யார் என்று தலையை எல்லோரும் பிய்த்துக் கொண்டிருந்த நிலையில், பாடல்களைக் கேட்டால் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் தல அனிருத் தான் அது என ரகசியத் தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.