பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகிருஷ்ணன் பேசியதாவது..

அனைவருக்கும் வணக்கம், குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட இயக்க போராளி. இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன்.

திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைததார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம்.

இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம்.

அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐபி விஸ்வநாதன் ஐயா வந்து ரொம்ப சிக்கனமான மனிதர் அவர் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். கலைச்சோழன் நான் பேச வேண்டியதை பேசி விட்டார்: நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் பேசியதாவது….

எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள். இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர்.

இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார். கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன். திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது. தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம்.

நம் சமகாலத்தில் வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவர், வாழ்ந்தவர் திருவள்ளுவர். இதிலே என்ன ஒரு உண்மை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்றால்? திருவள்ளுவர் என்கிற பெயர் திருக்குறளை எழுதியவர் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவர்தான் எழுதினார் என்பதற்கு ஆதாரம் இல்லை, அந்த நூலை எழுதியவர் பெயர் இதுதான் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவருடைய பிறப்பு அவருடைய வாழ்க்கை பற்றி, நாம் கேள்விப்படுகிற அனைத்தும் அவ்வப்போது அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை தவிர காமராஜரை போல உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாறு

அல்ல. காந்தியடிகளைப் போல இந்த தேதியில் பிறந்தார், இந்த தேதியில் வாழ்ந்தார் மறைந்தார், என்று சொல்லுகிற உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் எதுவும் இல்லை. இப்போது நம்முடைய ஆட்கள் திருவள்ளுவர் எந்த சாதியாய் இருக்கக்கூடும், எந்த மதமாய் இருக்கக்கூடும், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள். திருவள்ளுவர் மதச்சார்பின்மை கோட்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பதை இயக்குனர் சேகர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார். அதுதான் முன்னிறுத்தப்பட வேண்டிய செய்தி. அதுதான் கருத்தியல் ஆகவேதான் இயக்குனர் A. j.பாலகிருஷ்ணன் அவர்கள் திருவள்ளுவர் யார் என்பதை விட, திருக்குறள் என்ன என்பதுதான் மிகவும் முதன்மையானது, அது என்ன சொல்லுகிறது அதுதான் நமக்கு மக்களுக்கு போய் சேர வேண்டிய செய்தி, ஆகவேதான் திருவள்ளுவர் என்று இந்த திரைப்படத்திற்கு பெயர் பெயர் சூட்டாமல், ஒரு கதாநாயகனை ஆராதிக்காமல், அந்த நூல் சொல்லுகிற வாழ்வியலை, கருத்தியலை, கோட்பாட்டை, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற, மிக உயர்ந்த பார்வையோடு இதனை அவர் அணுகி இருக்கிறார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

1812 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இது அச்சுக்கு வந்தது என்ற தரவுகள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி என்றால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னர், அதற்கு முன்பு வரையில் இது அட்சிக்கு அட்சியில் வரவில்லை, ஓலைகளில் இருந்தது, ஓலைகளில் இருந்த திருக்குறளை, அன்றைய சென்னை மாகாணத்தின் அதிகாரியாக இருந்த எல்லிஸ் பிரபு, எல்லிஸ் துரை, பிரான்சிஸ் வைட் எல்லிஸ் அவருடைய முழு பெயர், அவரிடத்திலே கொண்டு போய் கொடுத்தவர் அயோத்திதாசர். பண்டிதருடைய தாத்தா கந்தப்பன் என்பவர் அவர்தான் தன் வீட்டில் பரனில் இருந்த ஓலைச்சுவடிகளை கொண்டு போய் எல்லிஸ் துறையிடம் கொடுத்து அவர் அதை படித்து அதை அச்சுக்கு கொண்டு வந்தார், என்று வரலாற்று தரவுகள் நமக்கு கூறுகின்றன.

இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1800 12ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
எல்லிஸ் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் அந்த ஹென்ரி ஒயின்ஸ்டன் என்பவரும், அவருக்கு பிறகுதான் எல்லிஸுக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு 1856லே கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒட்டுலக்கணம் எழுதுகிறார் இந்த மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்கிற செய்தியை தாண்டி இந்தியாவில் பேசப்படக்கூடிய பல்வேறு மொழிகளுல் மிகவும் தொன்மை வாய்ந்தது சிறப்புக்குரியது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தான் என்கிற செய்தியையும் சொல்லுகிறார்கள்.
அந்த காலத்திலே பாலிமொழி இருந்தது, அந்த காலத்திலே சமஸ்கிருதம் இருந்தது, இன்றைக்கு பாலி மொழியை பேச யாருமில்லை பௌத்தம் புத்தரே பேசிய மொழி பாலிமொழி என்று அறியப்படுகிறது. இப்போது இப்போதைக்கு அது பேச்சு வழக்கிலே இல்லை சமஸ்கிருதம் சான்ஸ்கிரிட் இன்றைக்கு பேச்சு வழக்கிலே இல்லை. அந்த சமகாலத்தில் தோன்றியால் அல்லது அதற்கு முன்பு தோன்றிய வரலாற்று தரவுகளை கொண்ட தமிழ் மொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகம் தழுவி அளவில் வலிமை பெற்றிருக்கிறது. புதுமையை உள்வாங்கி இருக்கிறது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு தொன்மையும் புதுமையும் இணைந்த ஆளுமை மிக்க ஒரு மொழி பல மொழிகள் தோன்றி வளர்ந்து முதுமை அடைந்து மறைந்து போய்விட்டன, தமிழ் நிலைத்துள்ளது. இன்றைக்கு கணினி மொழி வந்துவிட்டது. அது புதுமை. கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி.

தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற எத்தனை படைப்புகள் இருந்தாலும் அந்த 18 கீழ்க்கணக்கு
நூல்களிலே, திருக்குறள் மட்டும்தான் உலகளாவிய நூற்றுக்கணக்கான மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்ற பெருமுக்கிருவ நூல், திருக்குறள். அண்ணன் வி சேகர் அவர்கள் சொன்னதை போல இது ஒரு மதம் சார்ந்த நூலாக இருந்திருந்தால், அந்த மதத்திற்குரியவர்கள் மட்டும்தான் போற்றி இருப்பார்கள், போற்றிக் கொண்டிருப்பார்கள், பைபிள் கிறிஸ்தவர்களுக்குரியது, அதனால் ஆனால் உலகத்தில் எந்தெந்த மொழியை பேசுகிறவர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த மொழியிலே பைபிளை மொழியாக்கம் செய்கிறார்கள். குர்ஆன் இஸ்லாமியர்களுக்குரியது, இஸ்லாமியர்கள் உலகம் தழுவிய அளவில் வாழ்கிறார்கள், அவர்கள் என்னென்ன மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து கொள்கிறார்கள். அதனால் அனைத்து பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஹீபுரு அல்லாத பிறமொழி பேசக்கூடிய அரபு அல்லாத பிறமொழி பேசக்கூடிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதவழி சார்ந்த மக்கள் தங்கள் தாய்மொழியில் அந்த குர்ஆனை அந்த வேத நூலை மொழியாக்கம் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று கட்டாயம் ஏற்படுகிறது. குர்ரானுக்கு, பைபிளுக்கு ஆனால் அப்படி எந்த மதத்தையும் சாராமல், ஆனால் எல்லா மொழிகளை சார்ந்தவர்களும், ஒரு மொழியை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், ஒரு நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரிய நூல் திருக்குறள் மட்டும்தான். இது மனித குலத்துக்கே பொதுவான நூல் உலக பொதுமறை அப்படித்தான் திருக்குறளை நாம் முன்னிறுத்த வேண்டியது இருக்கிறது. இதை உயர்த்தி பிடிக்க வேண்டிய ஒரு பார்வை நமக்கு வேண்டும். அந்த பார்வை நம்முடைய இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு திருக்குறள் என்று அவர் பெயரிட்டிருக்கிறார். தலைப்பிட்டுருக்கிறார். இதுவே அவருடைய சிறப்பு என்பதை சொல்லி இந்த அறிய வாய்ப்பை எனக்கு வழங்கிய அண்ணன் இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.

கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.