வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.

அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது.

அன்று காலை எட்டுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்போதைக்கு இந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் நெல்சன், தேவைப்பட்டால் படத்திலும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின் ஜூலை முதல்வாரத்தில் மீண்டும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அறிமுகக் காணொலி தயாராகியிருக்கிறது.

அக்டோபர் 4 ஆம் தேதி அதை வெளியிடுவதாக அறிவித்தார்கள்.ஆனால் தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை என்று சொல்லி அதைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள்.தணிக்கைச் சான்று கிடைத்தால்தான் திரையரங்குகளில் அதை ஒளிபரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவிருக்கிறார் என்றும் நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஸ்ரீலீலா மற்றும் சமந்தா ஆகிய மூவரில் ஒருவர் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.இவர்களுடைய படப்பிடிப்புத் தேதிகள் யாருக்கு ஒத்துவருகிறதோ அவர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில்,இன்று காலை 8.09 மணியளவில் இப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் பெயர் அரசன்.படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஆளப்பிறந்த அரசன் வெற்றியுடன் சிலம்பரசன் என்கிற புகழுரையோடு படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார். ராஜன் எனும் பெயரின் தூய தமிழ் வடிவம் அரசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகக் காணொலி எப்போது வரும்? என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், அறிமுகக் காணொலி எப்போது வேண்டுமானாலும் வரட்டும் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம் என்று இயக்குநர் வெற்றிமாறன் முடிவெடுத்துவிட்டாராம்.

அதன்படி, அக்டோபர் 17 ஆம் தேதி அரசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

முதலில் படப்பிடிப்புக்காக தென்சென்னைப் பகுதியில் வடசென்னை போல் ஒரு பெரிய அரங்கு அமைக்கப்படுகிறது அங்குதான் படப்பிடிப்பு தொடங்கும் பெரும்பகுதிப் படப்பிடிப்பு அதில்தான் நடக்கும் என்று சொன்னார்கள்.இப்போது அரஙக்ம் அமைக்காமல் நேரடியாக வடசென்னைப் பகுதிகளிலேயே படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.