கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.

படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்:

“ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் ஆதரவு தாருங்கள்.”

ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப்:

“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் அபின் அவர்களின் முதல் படம் போலவே இல்லை — மிக நன்றாக இயக்கியுள்ளார். ஹீரோவுக்கும் இது முதல் படம் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்.”

இயக்குநர் அரவிந்த்:

“நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்சியூராக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார் — முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார்.”

இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன்:

“ஒரு நல்ல படம் மக்களிடம் செல்வதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியம். நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம். நன்றி.”

நடிகை கௌரி கிஷன்:

“மீடியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார் — அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.”

நடிகர் ஆதித்யா மாதவன்:

“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 எங்கள் தீபாவளி — நீங்களும் பார்த்து சொல்லுங்கள்.”

இயக்குநர் அபின் ஹரிஹரன்:

“ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம் — அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”

நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்
இயக்கம்: அபின் ஹரிஹரன்
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
இசை: ஜிப்ரான்
பாடல் வரிகள்: மோகன் ராஜன்
எடிட்டிங்: ராமர்
கலை இயக்கம்: உமா சங்கர்
இணை தயாரிப்பு: அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன்

 
Trailer 
YouTube player
 “அதர்ஸ்” — உலகமெங்கும் திரையரங்குகளில் நவம்பர் 7 முதல்!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.