தென்மாவட்டத்தின் தேவர்சாதிப் பெண் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி சில ‘முற்போக்கு மசாலா’வை கலந்து எடுக்கப்பட்டு தற்போது திரையரங்கில் வெற்றியும் பெற்றிருக்கிறது தாய்கிழவி திரைப்படம்.அரசியலோ கலையோ வெற்றி பெற்ற பலவும் கொண்டாடத் தகுதி பெற்றவையாக இருப்பதில்லை.
https://www.facebook.com/share/p/17YDQzyYDG/
அண்ணாமலை சீமான் தொடங்கி பல அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் “அக்காவியத்தை” புகழ்ந்து வருகின்றனர்.பாரதிராஜவின் இடத்தை பிடித்துவிட்டார் என சிலாகித்தும் பல தேவர்சாதி முகநூல் ஆண்டபரம்பரையினர் தங்கள் சாதி ‘குறி’யிடூகளையும் கொண்டாடி வருகின்றனர்.
ரஞ்சித், மாரி செல்வராஜ் வருகைக்கு பின் திரைத்துறையில் சற்று தங்கள் சாதிக்கான பெறுமிதம் மங்கிக்கொண்டிருக்கும் வேலையில் கிடைச்சதுடா நம்ம சாதிக்கான அடுத்த சினிமான்னு குதுகலிக்கின்றர்.
இது தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய சினிமாவா என்பது பிறகு இருக்கட்டும் முதலில் இது தேவர்சாதியினரே கொண்டாடத் தகுதியான சினிமா தானா என்பது தான் நம் கேள்வி.
2 பைசா 4பைசான்னு தொடங்கி 10 பைசா வட்டி வரை, கந்து வட்டி,மீட்டர் வட்டி,மகளீர் குழு கடன்,மாதத்தவனைன்னு கோடிக்கணக்கான பெண்களும் குடும்பங்களும் துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
குழுலோன் எடுத்த இடத்தில் சரியான நேரத்திற்கு தவணைத் தொகையை கட்ட முடியாமல் ஏச்சுக்கும் பேச்சும் ஆளாகும் பெண்கள் படும் பாடு பல கண்ணீர் கதைளை கொண்டிருக்கிறது.
வட்டிக்கு கடன் வாங்கிட்டு வட்டி கட்டவும், அசலை கட்டவும் முடியாமல் வட்டி கட்டவே வட்டிக்கு வாங்கும் பலரும் தவிக்கும் பாடு, வசவுச்சொல் மானக்கேடனா வார்த்தை எத்தனை குடும்பங்களை தற்கொலைக்கும் அரசு அலுவலகங்கள் முன் நெருப்புக்கும் பலி கொடுத்திருக்கிறது.
வீட்டுக்கு வந்து கேவலப்படுத்துவது கெட்டவார்த்தையில் திட்டுவது மிரட்டுவது அடிப்பது தொடர்ந்து போன் செய்து தொல்லை தருவது என பாதிப்பும் பலியின் எண்ணிக்கையும் உயர உயர அரசே சட்டம் போட்டு கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது. சமீப காலங்களில் அதற்கான சட்டமும் போடப்பட்டுவிட்டது.
நாடே இந்நிலைமையில் இருக்க இதில் தேவர் சாதியினர் மட்டும் என்ன விதிவிலக்கா?
தேவர் சாதியினரிடம் வட்டிக்கு வாங்கிய பிற சாதியினர் பட்ட பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்.
வட்டியை சரியான நேரத்தில் தரவில்லை என தன் சொந்த தேவர்சாதிக்காரகளாக இருந்ததாலும் கூட வட்டிக்கு விடும்,பைனான்ஸ் பண்ணும் “பெரிய தேவர்களும்” “தாய்கிழவிகளும்” பெரிய மனதோடு விட்டிருக்கிறார்களா?அவகாசம் கொடுத்தினுக்கிறார்களா?
அதே அவ மரியாதை தான் அசிங்கப்படுத்தல் தான்.நாயிலும் கேவலமான பேச்சு தான்.ஒரே சாதியாக இருந்தாலும், கூடவே பிறந்திருந்தாலும் பணம் இல்லாதவர்களை மதித்திருக்கிறார்களா?
இந்த திரைக்காவியம் தொடங்கும் போதே கலெக்சனுக்கு கிளம்பும் தாய் கிழவியின் வருகையை பார்த்து ஊரே கதிகலங்கி தெரிச்சி ஓடும். கண்ணில் காண்பவர்களையெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டி,அடிக்கும் கிழவியின் செயல் பார்வையாளர்களுக்கு நகைச்சுவையை ஏற்படுத்தும். தாய்க்கிழவியின் வருகையை நிஜத்தில் எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு அந்த நகைச்சுவை காட்சியும் பிறரின் சிரிப்பு சத்தமும் நிச்சயம் அருவருப்பையே ஏற்படுத்திருக்கும்.
பெண்விடுதலை, பெண் பொருளாதார சுதந்திரம், பணம் சந்தோஷத்தைக் கொடுக்குமானு தெரியாது ஆனா மரியாதையை கொடுக்கும் ன்னு சில முற்போக்கு பஞ்ச் வைத்திருக்கிறார்கள். அதற்காகவெல்லலாம் இது கொண்டாடத்தகுதியானதா என்றால் நிச்சயமா இல்லை.
ஊருக்கு ஒன்னு ரெண்டு தாய்கிழவிகள் இருந்து பல ஆண்களையும் குறிப்பாக பெண்களையும் அவர்களுக்கு உண்டான கண்ணியம் சுயமரியாதை எல்லாவற்றையும் நாசம் செய்து, வட்டிக்கு விட்டு பிழைக்கும் தாய் கிழவிகளை வைத்து முற்போக்கு பேச விடுவதை,பெண்சுயமரியாதை,பெண்ணியம்,பெண் பொருளாதாரம் என்று பேசுவதெல்லாம் இயக்குனரும்,தமிழ் இனத்தின் வாழ்வியல் என சீமானும் வெட்கமில்லாம் புகழலாம்.பல ஏழை பெண்களாலும் வட்டிக்கு வாங்கி துன்பப்பட்டவர்களாலும் திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கும் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தீ பற்ற வைத்துக்கொண்டு இறந்து போன இசைக்கி முத்து குடும்பத்தை கண்டு கண்ணீர் வடித்த மனிதாபிமானமுள்ளவர்களுக்கும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தாது அருவருப்பையே ஏற்படுத்தும்.
எத்தனையோ தேவர் சாதி பெண்கள் அரசுப்பணியாளர்களாகவும்,வியாபாரம் செய்தும்,உணவகங்கள் நடத்தியும் கல்உடைத்தும்,சித்தாள் வேலையும் இன்னும் பல ஆண்களே செய்யத்தயங்கும் உடல் உழைப்பு வேலைகளையும் கூட செய்து நேர்மையாக தன் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்கள்.அப்டிப்பட்ட உழைக்கும் தேவர்சாதி பெண்கள் தான் பாராட்டத் தக்கவர்கள்,போற்றத்தக்கவர்கள்,முன் உதாராங்களாக காட்டப்படவேண்டியவர்கள்.தமிழ் சினிமா படமாக்கப்பட வேண்டியது அவருடைய வாழ்வும் வலியும்தான். தாய்க்கிழவிகள் போன்ற வக்கிரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்– –திருக்குறள்.
உழைத்து வாழவேண்டும் பிறரிடம் கையேந்தக்கூடாது அப்படி கையேந்தி தான் வாழமுடியும் என்ற நிலையில் உலகை படைத்தவன் எவனோ அவன் அழிந்து போகட்டும் என்கிறார் வள்ளுவர்
குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் உழைத்தும்
வாழ்க்கையின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட வட்டிக்கு கடன் வாங்கித்தான் வாழ வேண்டும் என்பது தற்போது எழுத்தப்படாத சமூக விதியாக இருக்கிறது அவ்விதியை அழித்து மாற்றி எழுதும் அரசியல் பணிக்காகத் தான் கம்யூனிஸ்ட்கள் போராடி வருகின்றார்கள்.அவர்களோடு இணைந்து உழைக்கும் (தேவர் சாதி உட்பட)ஆண்களும் பெண்களும் பிற பால் வகையினரும் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டிய அரசியலும் பணியும் அது தான்.
–முகிலன்
https://www.facebook.com/share/p/17YDQzyYDG/
