சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் – ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.
இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்…ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  

படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் – கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.

வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. ‘லக்கி பாஸ்கர் ‘, மற்றும் ‘வாத்தி’ ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.

YouTube player
 
 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.