ஒரு படத்தின் ட்ரைலரே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி, சமகால அரசியல்+சினிமா பிரமுகர் குறித்த கதை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உமாபதி இயக்கத்திப் நட்ராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள TN 2026 தங்க நட்சத்திரம் எப்படியுள்ளது? பார்ப்போம்.
குல்கந்த் குமார்(நட்ராஜ்) வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து ஒரு பெரிய நடிகராக விரும்புகிறார். ஆனால், அவருக்கு துணையாக யாருமே இல்லாமல் தடுமாற, அவரின் முதல் படம் பிடித்துபோய் தம்பி ராமையா அவருக்கு ஆதரவாக பல உதவிகளை செய்கிறார்.
அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆன தம்பி ராமையா நட்ராஜ் வளர்ச்சிகாக தன் சொத்தை விற்று முன்னேற்ற, அவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆகிறார்.
அதை தொடர்ந்து நட்ராஜ் நன்றாக வளர்ந்த பிறகு தன் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்ற், கவர்மெண்ட் இவர் அரசியலுக்கு வருவாரோ என நினைத்து பல நெருக்கடிகளை தருகிறது.
இதனால் கொந்தளித்து குல்கந்த் குமாராம நட்ராஜ் புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார், 2026-ல் முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்க, அது நடந்ததா இல்லை குல்கந்துக்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
நட்ராஜ் கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மைல் கல் தான், ஒரு நடிகரின் வளர்ச்சியையும், அவர் வளர்ந்த பிறகு எப்படி மாறுவார் என்பதையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து கலக்கியுள்ளார், அதிலும் இடைவேளையில் போலிஸ் தடுக்க அவர் இறங்கி நடந்து வரும் காட்சி எல்லாம் ரசிக்க வைக்கின்றார்.
தம்பி ராமையா நட்ராஜுக்கு காட்பாதராக வந்து, கடைசியில் அவரையே தலைவர் என அழைப்பது நாம் கோடம்பாகத்தில் நாம் பார்த்த பல முகங்களை நியாபகப்படுத்துகிறார்.
ஒரு நடிகன் எந்த தவறு செய்தாலும் கூட இருக்கும் மக்கள் குடும்பம் இல்லையென்றால் யாரும் வரமாட்டார்கள் போன்ற வசனம் எல்லாம் நிகழ்கால யாரையோ கடுமையாக அட்டாக் செய்தது போல் உள்ளதே என தியேட்டரிலேயே கமெண்ட் வருவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் முதல் பாதி குல்கந்த் குமார் எப்படி வளர்ந்து உச்சம் தொட்டு, அரசியலுக்கு வருகிறார் என்பதே விறுவிறுப்பாகவே செல்கிறது, ஆனால், இரண்டாம் பாதி தற்போது நடக்கும் பல நிகழ்வுகளை நியாபகப்படுத்தினாலும் சுற்றி சுற்றி கதை ஒரே இடத்திலேயே சுற்றி கொஞ்சம் திரைக்கதை தொய்வாகிறது.
ஆனால், இப்படி ஒரு களத்தையும் கதாபாத்திரத்தையும் உருவாக்கி அதை தைரியமாக எடுத்ததற்கு தம்பி ராமையா, உமாபதியை பாராட்டலாம். டெக்னிக்கலாக ஒளிப்பதிவு OK ரகம் என்றாலும் தர்புகா சிவாவின் பின்னணி இசை சூப்பர்.
நடிகர்கள் பங்களிப்பு
பல காட்சிகள் சமகால நடிகர் ஒருவரை நியாபகப்படுத்தினாலும், அதை பெரிய டேமேஜ் உருத்தல் இல்லாமல் ரசிக்கும்படி எடுத்து சென்றது.
இரண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்யம் விறுவிறுப்பு இருந்திருக்கலாம்.
