AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” புகழ் ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், இன்றைய Gen Z தலைமுறையின் வாழ்க்கை முறை, காதல் உறவுகள் மற்றும் அதனால் உருவாகும் சிக்கல்கள் புதுமையான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நவீன கால காதலியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. இளைஞர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

AP இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

சென்னை, வியட்நாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்
இயக்கம் – விக்கி பாஸ்கர்
ஒளிப்பதிவு – லூக் ஜோஸ்
எடிட்டிங் – நாஷ்
இசை – பரத் சங்கர்
பப்ளிசிட்டி டிசைன் – வியாகி
உடை வடிவமைப்பு – நவா ராஜ்குமார்
கலை இயக்கம் – வீரமணி கணேசன்
சிஜி – Srivfx
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.