உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்று, தற்போது இந்தியத் திரையரங்குகளில் தமிழ் டப்பிங்குடன் வெளியாகியிருக்கும் ஒரு அசத்தலான அனிமேஷன் ஃபேண்டஸி திரைப்படம் தான் ‘பூனி பியர்ஸ்: தி ஹிட்டன் ப்ரோடெக்டர்’.

பண்டைய சீனப் புராணக் கதைகளில் வரும் ‘னியான்’ என்ற மாயாஜால விலங்கு, பொதுவாக மனித உலகிற்குப் பயத்தையும் தீமையையும் தருவதாகக் கருதப்படும் ஒரு உயிரினம். ஆனால், இந்தக் கதையில் அந்த னியான் விலங்கு திடீரென காணாமல் போகிறது. அதற்கு முன்பாக, காட்டின் அரண்களாக இருக்கும் கரடி சகோதரர்களான பிரையர், பிராம்பிள் மற்றும் அவர்களின் மனித நண்பனான மரம் வெட்டி விக் (ஏiஉம) ஆகிய மூவருக்கும் எதிர்பாராத விதமாக விசித்திரமான அமானுஷ்ய சக்திகளை னியான் வழங்குகிறது. இந்த சக்திகளின் உதவியோடு, அவர்கள் மனிதர்களுக்குத் தெரியாத, அழியாத தன்மைகொண்ட மந்திர விலங்குகள் வாழும் ரகசிய உலகமான ‘ஈவ் சிட்டி’ என்ற மாயாஜாலப் பகுதிக்குள் நுழைகிறார்கள். அங்குச் சென்ற பின் தான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியவருகிறது. அந்த மாயாஜால உலகத்தையும், அதன் வழியே ஒட்டுமொத்த மனித உலகத்தையும் முழுமையாக அழிக்க ஒரு கொடூரமான வில்லன் பெரிய சதித்திட்டம் தீட்டி வருகிறான். ஆபத்தான அந்தப் பெரும் பாதாளக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அரக்கர்களை அவிழ்த்துவிட்டு பேரழிவை ஏற்படுத்த அவன் முயல்கிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கரடிகளின் “பெரிய அண்ணன்” மற்றும் பலசாலியான பிரையர், விசித்திரமான ஒரு சாபத்தால் தன் பலத்தை இழந்து பலவீனமாகிறான். இதையெல்லாம் தாண்டி, விக் மற்றும் பிராம்பிளின் உதவியோடு அவர்கள் அந்த வில்லனின் சதியை எப்படி முறியடித்தார்கள், னியான் விலங்கைக் காப்பாற்றி இரு உலகங்களையும் எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.

முன்னணி கதாபாத்திரங்களான பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஆகிய மூவரின் அனிமேஷன் வடிவமைப்புக்கு, தமிழ் டப்பிங் குரல் கலைஞர்கள் தங்களின் உணர்ச்சிகளை அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பலசாலியான பிரையர் திடீரென தன் சக்திகளை இழந்து தன் தம்பியைப் பாதுகாக்கப் போராடும் இடங்களில், பாசத்தையும் ஏகப்பட்ட உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். பிராம்பிளின் நகைச்சுவையான வசனங்களும், விக்கின் சமயோசித புத்தியும் ரசிகர்களைப் பெரிதும் கவர்கின்றன. துணைக் கதாபாத்திரமாக வரும் ‘னியான்’ விலங்கின் கம்பீரமும், அதன் பின்னணியும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பார்ப்பவர்களின் மனதைத் தொடுகிறது.

இசையமைப்பாளர் மார்க் வில்லாட்டின் பின்னணி இசை படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கும், உணர்ச்சிகரமான தருணங்களுக்கும் பெரும் பலமாக அமைந்து காட்சிகளை மெருகேற்றி அனிமேஷன் உலகிற்குள் நம்மை முழுமையாக மூழ்கடிக்கின்றன.

ஒளிப்பதிவாளர் லியூ பெங் கையாண்ட கேமரா கோணங்கள் பிரம்மாண்டத்தின் உச்சம். மாயாஜால ஈவ் சிட்டியின் அழகையும், பறக்கும் காட்சிகளையும் திரையில் அத்தனை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தொகுப்பாளர் டாங் ஹ_ய் தன் கத்தரியால் ஒட்டுமொத்தப் படத்தையும் 118 நிமிடங்களுக்குள் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், இரண்டாம் பாதியின் நடுவே வரும் சில நீளமான சண்டைக் காட்சிகளை இன்னும் சற்றே கத்திரித்து இருக்கலாம், அது சில இடங்களில் லேசான சலிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது ஒரு சிறிய பலவீனம் மட்டுமே.

கலை இயக்குனர் சாவ் ஜிஜியின் கற்பனையில் உருவான ஈவ் சிட்டியின் வண்ணமயமான வடிவமைப்பு அற்புதமாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் அனிமேஷன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் எனர்ஜி பிளாஸ்ட்கள் மற்றும் வான்வெளி சாகசங்களை ஆக்ஷன் டீம் மிகவும் துல்லியமாக வடிவமைத்து சிறப்பாகக் கையாண்டு காட்டியுள்ளனர்.

 
சீனப் புராணங்களில் வரும் னியான் அரக்கனின் கதையை முற்றிலும் ஒரு புதுக்கோணத்தில், ஏன் அதற்குப் பட்டாசுகளையும் சிவப்பு நிறத்தையும் கண்டு பயம் வருகிறது என்ற பின்னணியை வித்தியாசமான முறையில் கற்பனை செய்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர். திரைக்கதை நகர்வுக்குப் புராணக் கதையையும் நவீன அனிமேஷனையும் இணைத்த விதம் படத்திற்குப் பெரும் வலு சேர்த்து உள்ளது. ஆரம்பக் காட்சிகள் காட்டின் அழகோடு தொடங்கி, சட்டென்று மாயாஜால உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லும்போது படம் அசுர வேகம் எடுக்கிறது.
 
YouTube player
 
இயக்குனர் லின் {ஹயிடா, ஒரு வழக்கமான அனிமேஷன் படமாக இதைக் கொண்டு செல்லாமல், உணர்ச்சிகரமான மற்றும் குடும்பபாங்கான ஒரு மாபெரும் சாகசப் படமாக இதை இயக்கி வெற்றிகண்டுள்ளார். இன்றைய அவசர உலகில், நம்மை நேசிக்கும் சொந்தங்களையும், நண்பர்களையும் நாம் எப்படித் தவறவிடுகிறோம் என்பதை அனிமேஷன் வழியே ஆழமாகப் புரிய வைத்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் தங்களின் முழு உழைப்பையும் வழங்கி, இயக்குனர் எதிர்பார்த்ததை நன்றாக உள்வாங்கி அதற்குத் திரையில் வடிவம் கொடுத்து, கதை திரைக்கதை நகர்வுக்குப் பெரிதும் உதவியுள்ளனர். எந்த இடத்திலும் தேவையற்ற தொய்வு ஏற்படாதவாறு காட்சிகளை நகர்த்தியதில் இயக்குனரின் திறமை பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் பூனி பியர்ஸ்: தி ஹிட்டன் ப்ரோடெக்டர் என்பது கண்களுக்குக் விருந்தளிக்கும் பிரம்மாண்ட காட்சிகளுடனும், நெஞ்சைத் தொடும் நற்பண்புகளுடனும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான குடும்பபாங்கான திரைப்படமாகும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தியேட்டரில் 3டி-யில் கொண்டாடி மகிழ வேண்டிய இந்த மாயாஜால அட்வென்ச்சர் திரைப்படம், இந்த வாரத்தின் மிகச் சிறந்த சினிமா தேர்வாகும்!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.