சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் கதாநாயகனாக நடிக்கும் அறிவிப்பு ஏன் இவ்வளவு பரிகசிப்புக்கு உள்ளாகிறது..?
இதன் உளவியல் என்ன..?
பொதுவாக திரைப்படமும், அரசியலும்
நம் மக்களுக்கு அன்றாட வாழ்வியலில் நெருக்கமான துறைகள்..வேறு வகையில் கிடைத்த விளம்பரத்தைத் தகுதியாகக் கொண்டு
இந்தத் துறைகளுக்குள் பைபாஸ் வழியாக் நுழைவதை நம் மக்கள் ஏளனமாகவே நோக்குவார்கள்..
கதாநாயகனாக இருந்த ராமராஜன் முதல்வராக முயன்றதும்,அரசியலில் பிரபலமாக இருந்த திருநாவுக்கரசு கதாநாயகனாக நடித்ததும் இவ்வாறு ஏளனத்துக்குரியதாகத்தான் இருந்தது..நாற்காலிக் கனவிலிருக்கும் எல்லா நவயுக நாயகர்களுக்கும் இதே நிலைதானிருக்கிறது..
ஒரு விஜயகாந்த் மட்டுந்தான் அண்மையில் இதை வெற்றி கண்டார்..
சரவணா முதலாளி அவர் காசில் படமெடுத்து அவரே நடிக்கிறார்..நம் கதாநாயகர்கள் முதல்வராவதற்கு உரிமையிருப்பது போலவே
மொதலாளிக்கும் கதாநாயகனாவதற்கு உரிமையிருக்கிறது..
திரைப்பிரபலத்தின் வாரிசுகளோ, தோல் வெளுத்த பேரழகன்களோதான் கதாநாயகனாக வேண்டுமென்ற சட்டமெதுவுமில்லை..
சரவணர் தனக்குப் பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுத்து வெல்லட்டும்..
வாழ்த்துகிறேன்..
அடுத்த முதல்வர் பட்டியலில் அண்ணாச்சியும் இடம்பெறட்டுமே..அதர்லேண்ட் விருந்தினர்களுக்குள்ள அந்த உரிமை மதர்லேண்ட் லெஜண்ட்டுக்கில்லையா..
ஐயாம் வெயிட்டிங்…
முகநூலில்…கவிதா பாரதி.