தமிழிலிலேயே வசூலில் ததிங்கிணத்தோம் பாடிய ‘வேட்டை’ படத்தை, என்ன வேண்டுதலோ, டோல்லி என்பவர் இயக்க, பெல்லகொண்டம் சுரேஷ் தெலுங்கில் தயாரிக்கிறார்.
சமீரா ரெட்டி நடித்த அக்கா கேரக்டரில், நம்ம ஆண்ட்டிரியா ஜம்மென்று அமர்ந்துகொள்ள, அமலாபால் நடித்த தங்கை கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்பதில் தயாரிப்பாளரும், இயக்குனரும் கடந்த பத்து நாட்களாக தாங்களும் குழம்பி, மொத்த ஆந்திர இண்டஸ்ட்ரியையும் குழப்பி வருகிறார்கள்.
மிகத் துவக்கத்தில் இலியாணா பெயர் அடிபட்டு, அவர் கேட்ட சம்பளத்தால் படத்தில் அவர் இல்லையண்ணா என்று ஆனபிறகு, ‘அந்த கேரக்டரில் நான் தான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் சுரேஷ்காருடன் ஒப்பந்தம் போட்டு அட்வான்ஸும் வாங்கிவிட்டேன்’ என்று சகலருக்கும் அறிவித்துக்கொண்டிருந்தார் ஹன்ஷிகா மோத்வானி.
இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இப்போது அந்த கேரக்டரில் தமன்னா ஒப்பந்தமாகி இருப்பதாக தயாரிப்பாளர் வட்டாரத்திலிருந்தே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
இப்படி, தனது கேரக்டருக்கு மியூசிக்கல் சேர் நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு, ‘’ ஏன் எனக்கு என்ன குறைச்சல் தமிழ்ல நான் நல்லாத்தானே பண்ணியிருந்தேன்? என்று மேனேஜர் மூலம் பட இயக்குனரை தொடர்புகொண்ட போது, ‘நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் உங்களை கமிட் பண்ணும் எண்ணத்தில் சற்றும் இல்லை’ என்று ரெகார்டட் வாய்ஸ் வந்ததாம்.
அமலாவுக்கேத்த மாப்பிள்ளை எவன் இருக்கான் பயபுள்ள? என்று இயக்குனர் டோல்லி முடிவெடுத்திருப்பார் போலும்.
அப்ப ஒருவேளை தெலுங்குல ஹிட் ஆக்கிடுவாய்ங்களோ?