வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகக்கிளம்பும்போது, நம் நடிகைகள் மறக்காமல் விட்டுச்செல்லும் ஸ்டேட்மெண்ட்,’’ இனிமேல் சினிமா இருக்கும் திசையில் தலை வைத்துக்கூட படுக்கமாட்டேன்’’.
அதை ஒட்டி பல ரசிகர்கள் சோறும் நீரும் இறங்காமல் தவிப்பது தெரிந்தோ என்னவோ, சிலபல மாதங்களில், வெளிநாட்டில் இருந்து பேக் அப் ஆகி, திரும்பவும் மேக் அப் போட வந்துவிடுகிறார்கள்.
அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு தொடையழகி ரம்பா.
கடந்த வாரம், தான் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கப்போவதாக அறிவித்த ரம்பாவின் சகோதரர் வாசுவிடம், ரம்பா மீண்டும் நடிக்க வருகிறாரா என்று கேட்டபோது திட்டவட்டமாக மறுத்தார்.
அடுத்த சில தினங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடுதிப்பென்று கனடாவிலிருந்து பொட்டிபடுக்கையுடன் புறப்பட்டு வந்த ரம்பா, வந்த உடனேயே ‘ருமாடின்’ என்ற உடல் வலி நிவாரணி விளம்பரத்தில் நடித்தார்.
அத்துடன், தனது லேட்டஸ்ட் உடல்வாகுவை திரையுலக கலைஞர்களுக்கு எடுத்துக்காட்டி, மீண்டும் படங்களில் நடிக்கும் பொருட்டு போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்திக்கொண்டிருக்கிறாராம்.
டைட்டில்ல ஜொள்ளுவிட வச்சிட்டு, இப்ப வேற ஏதோ ஜல்லி அடிக்கிறீங்களே பாஸ்?
’நோ டென்சன்ஸ் ரம்பா நடித்த ‘ருமாடின்’ விளம்பர நிறுவனத்தினர், தங்களது வலி நிவாரணி பொதுஜனங்களை சீக்கிரம் சென்றடையும் பொருட்டு, ஒரு போட்டி நடத்த இருக்கிறார்களாம். அதில் வெல்லும் நூறு பேருக்கு மட்டும் ரம்பாவே நேரில் வந்து உங்க உடம்பு அசதி தீர வசதியா ஆயின்மெண்டை தடவி விடுவாங்களாம். இப்ப ஓ.கே.வா பாஸ்?