இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ரேடியோ மிர்ச்சிக்கு அளித்த பேட்டியொன்றில் தான் பாலிவுட் ஹிந்திக்காரர்களால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் தனது படத்திற்கு பாடல்கள் கேட்டு வந்திருக்கிறார் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான முகேஷ் சாப்ரா.
அவருக்கு இரண்டே நாட்களில் நான்கு பாடல்களை கம்போஸ் செய்து வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பாடல்களைக் கேட்டு விட்டு ரஹ்மானை வெகுவாகப் பாராட்டிய முகேஷ், “என்னிடம் பலபேர் உங்களிடம் பாடல் கேட்கப் போக வேண்டாம் என்று தடுத்தார்கள். அதற்கு உங்களைப் பற்றி பொய்யான கதைகள் பலவற்றையும் கூறினார்கள். ஆனால் இங்கே வந்த பின் தான் அவை அனைத்தும் பொய் என்று தெரிந்து கொண்டேன்” என்று கூறினாராம்.
பாலிவுட்டில் ஹிந்திக்காரர்கள் தமிழர்களை இருட்டடிப்பு செய்வது இது முதல் முறையல்ல. இசைஞானி இளையராஜாவும் பாலிவுட்டால் தமிழன் என்பதால் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர் தான். இப்போது பால்கி போன்ற சில இயக்குனர்கள் வந்து அவ்வப்போது இளையராஜாவிடம் நல்ல இசையை வாங்கிச் செல்கிறார்கள்.
தன்னை பாலிவுட்காரர்கள் புறக்கணிக்க இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அது, அவ்வப்போது பரீட்சார்த்தமான, சமூகப் பிரக்ஞையுள்ள படங்களுக்கும் அவர்இசையமைத்துத் தருவதால் தான். இந்தப் படங்கள் விடுதலை பற்றி பேசுவதாகவும், சாதி, மத, இன வெறிக்கு எதிராக குரலெழுப்பும் படங்களாகவும் இருப்பது ஒரு முக்கிய காரணம்.
கடைசியாக நாம் இன்னொரு காரணத்தையும் சேர்த்துச் சொல்லலாம். அது அவர் இஸ்லாமியராக இருப்பது. அது இந்துத்துவாவாதி சங்கிகளின் கண்களை எப்போதும் உறுத்தும்.