இடையில் கொஞ்ச காலம் அமைதி காத்து வந்த அறிக்கை மன்னன் அமீர், நீதானே என் பொன் வசந்தம்’ ஆடியோ வெளியீட்டின் மூலம் கவுதமுக்கு கிடைத்த பெயரைப் பார்த்து, ’நானும் அடுத்த படத்துல இளையராஜாவைத்தான் மியூசிக் டைரக்டரா போடப்போறேன்’ என்று அமர்க்கள அறிக்கை விட ஆரம்பித்திருக்கிறார்.
அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தான் அடுத்து இயக்கப்போகும் ‘கண்ணபிரான்’ படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கவே, விஜய் தரப்பு வெகுவாக டென்சன் ஆகிவிட்டதாம். ‘ரெண்டு,மூனு வருஷத்துக்கு முந்தி ஆரம்பிச்ச’ஆதிபகவன்’ படத்த இன்னும் ரிலீஸ் பண்ற வழியைக்காணோம்.
அடுத்து இவர் ஹீரோவா நடிக்க, கரு.பழனியப்பன், டைரக்ஷன் பண்ற படம், கரு.பழனியப்பன் ஹீரோவா நடிக்க இவரு டைரக்ட் பண்ற படம், சசிக்குமார் டைரக்ஷன்ல அமீரும், கரு.பழனியப்பனும் டபுள் ஹீரோவா நடிக்கிற படம்னு ஏகப்பட்ட புராஜக்டுகளை கையில வச்சிக்கிட்டு, இப்ப எம் பேரை வேற ஏன் இழுக்கிறார்னு தெரியலையே’ என்று எதுகை மோனையோடு எகத்தாளம் செய்கிறாராம் விஜய்.
ஆமா அமீர், உலகநாயகன் மருதநாயகம் எடுத்தமாதிரி, நீங்களும் ஒரு பத்துப்பனிரெண்டு வருஷமா, இந்த ‘கண்ணபிரான்’ கதையை சூர்யா,ஆர்யாவுல தொடங்கி இப்ப விஜய் வரைக்கும் வந்துட்டீங்களே, இதுக்கு ஒரு முடிவுதான் என்ன?