மிக நிதானமாக அடியெடுத்து வைத்து அடுத்தடுத்து முக்கியமான படங்களைத் தயாரித்துவரும் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் ஏழாவது படைப்பை அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூலில் அவர் எழுதியுள்ள பதிவில்…

நண்பர்களுக்கு வணக்கம்…

#மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து, மக்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாளம், தமிழ் இரண்டிலும் இளையோர்களின் மனதைக் கொள்ளையடித்த நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்று [4.10.’21] இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் உங்கள் அன்பினாலும் ஆசிகளாலும் தொடங்கியுள்ளோம்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் ஏழாவது தயாரிப்பாக உருவாகிறது.

யுவனின் இசை. ஏகாம்பரம் ஒளிப்பதிவு. உமேஷ் ஜே குமார் கலை. மக்கள் தொடர்பு A. ஜான்.

பரபரப்பான படப்பிடிப்பில் படம் நகரும். இப்படத்தையும் உங்கள் மனதுக்கு நெருக்கமான படமாக விரைவில் கொண்டு வருவோம். உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்…என்று தெரிவித்துள்ளார்.

ராம், நிவின் பாலி,அஞ்சலி,மற்றும் நம்ம யுவன் ஷங்கர் ராஜா…அடடா காம்பினேஷன் அள்ளுதே…

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.