இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ என்கிற படம் நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி.
ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்கான அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்பின், இன்று அப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையுடன் அடங்கிய சலனப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்துக்கு “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு இசை – திபு நினன் தாமஸ்,ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்,படத்தொகுப்பு – ரூபன்,
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா,சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூரின் பேவியூ பிராஜெக்ட்ஸ் வழங்க ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகின்றது.
வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.