தமிழ்த்திரையுலக ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த இளையராஜா-பா.ரஞ்சித் கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’படத்தை இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் நாயகனாக நடிக்கு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் முதல் பார்வையை சமூக வலைதலங்களில் சில நிமிடங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளியிட்டார். அதில் பா.ரஞ்சித்தின் பெயருக்கு இணையாக இசைஞானி இளையராஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதை ராஜா ரசிகர்கள் மிக மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகிறார்கள்.
முன்னதாக ராஜா-பா.ரஞ்சித் கூட்டணி பேச்சு வார்த்தை நடை-பெற்றுவருவதாக செய்திகள் வெளியானபோது சில புல்லுருவிகள் பா.ரஞ்சித் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று ராஜா சொன்னதாக முட்டாள்தனமான செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
இதோ அவர்கள் முகத்தில் சாணியைப் பூசுவதுபோல் ராஜா, ரஞ்சித் கூட்டணி அரங்கேறியுள்ளது.