இனி தன்னை யாரும் என்று அழைக்கவேண்டாம் என்று தல போகிற அவசரத்தில் நடிகர் அஜீத்குமார் [எ] அஜீத் [எ] ஏ.கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘தல’ என்கிற பட்டத்துக்குப் பொருத்தமானவர் யார் என்கிற போட்டி,கூச்சல்,குழப்பம் அஜீத் மற்றும் தோனி ரசிகர்களுக்கு மத்தியில் நீண்ட நாட்களாகவே நிலவி வரும் நிலையில் அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜீத் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறர் என்று தெரிகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார், மற்றும் அஜித் என்றோ எல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
ஆக தோனி ரசிகர்கள் சியர்ஸ் சொல்லிக்கொண்டாடலாம்.