கொரோனா நோய்த்தொற்றுக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமல் முற்றிலும் குணமடைந்துவிட்டதாகவும், அவர் இன்னும் இரு தினங்களுக்குப் பின்னட் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அம்மருத்துவமனை சற்றுமுன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட வகையில் கொரோனா தொற்றுக்கு ஆளான கமல் தனது உடல்நிலை குறித்து ட்விட் வெளியிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவரது உடல்நிலை குறித்து இரு தினங்களுக்கு ஒருமுறை அறிக்கை விபரம் கொடுத்துவந்த ராமச்சந்திரா மருத்துவமனை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… கமல் முற்றிலும் குணமடைந்துவிட்டதாகவும், ஆனால் மேலும் இரு தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு டிசம்பர் 3ம் தேதி அன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் அவர் 4ம் தேதி முதல் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்ற சிபாரிசையும் ப்மருத்துவமனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கமலுக்காக ‘விக்ரம்2’படம் காத்திருப்பதால் உடனே படப்பிடிப்பை துவங்கவே அந்த எக்ஸ்ட்ரா சிபாரிசு என்று தெரிகிறது. அதே சமயம் பிக்பாஸ் செட்டுக்கு மீண்டும் போவாரா என்பது குறித்து தற்போதைக்கு எந்த தகவலும் இல்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.