இசை – இலக்கியன். பாடல்கள் – வைரமுத்து
இலக்கியன் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இவரது முதல் படம் இதுவா? தெரியவில்லை.
பாடல் ட்யூன்கள் ஏற்கனவே கேட்டவை தான். புதிதாய் ஏதும் தென்படவில்லை.
வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்த ஜாம்பவான் கவிஞர் ரொம்ப சிரத்தை
ஏதும் எடுத்துவிடவில்லை என்று தெரிகிறது.
1. ஒற்றைப் பனித்துளி – பிரசன்னா, சைந்தவி
மெலடி டூயட்டாக வரும் பாடல். கேட்கும் படி இருக்கிறது. வைரமுத்து வரிகள் ஓகே. ஹிட்டாகலாம்.
2. ஒரு பொண்ணப் பாரு – ராகுல் நம்பியார், ஷாம் பி கீர்த்தன்.
வெஸ்டர்ன் டைப் ஜாலி பாடல். ஓகே ரகம். ‘நாட்டுக்குள் அணுமின் நிலையம் கூடாதென்று சிலபேர் சொல்ல கண்ணுக்குள் அணுமின் நிலையம் கொண்டாய்’ – என்று வைரமுத்து அரசியல் வரிகளைத் சும்மா மேலுக்கு தடவிச் செல்கிறார். கவிப் பேரரசுக்கு ஒரு அரசியல் கருத்து சொல்ல அவ்வளவு பயமா ?
3. மண்ணை நம்பலாம் – ஷாம் பி கீர்த்தன்.
வழக்கமான பெண்களே மோசம் என்று காதலன் தோல்வி சோகத்தில் பாடும் பாடல். வழக்கமான ட்யூன்.
4. டிம்ப டிம்பா – மனசி ஸ்காட்
வழக்கமான டப்பாங்குத்துப் பாடல். கேட்கும் மாதிரி தான் இருக்கிறது.
5. ஒரு கூட்டுப் புழு – பத்மலதா 1.51
பெண்கள் சுதந்திரம் பற்றி மாடர்னாக வரும் சிறிய பாடல். கேட்கலாம்.
6. ஓ நெஞ்சே நெஞ்சே – ஹரிச்சரண்
காமத் தீயில் விழுந்துவிட்ட காதலர்களின் உடல் வேட்கை பற்றிய பாடல். தொடர்ந்து கதையின் ஓட்டம் பற்றி வரும் வரிகளும் உண்டு. ஹரிச்சரண் பாடியிருக்கிறார். இந்த டைப்பில் ஏற்கனவே கேட்ட பாடல்களின் டைப்பில் மற்றுமொரு பாடல்.
ஆக மொத்தத்தில் ஏற்கனவே கேட்ட ட்யூன்களில் வேறு வித கோர்வைகளில் ஏற்கனவே கேட்ட வகைப் பாடல்கள்.
இலக்கியனின் புதிய இசை புதிய இலக்கியமல்ல.