சினிமா நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என்ற வேறு வேறு சங்கங்கள் இருந்த போதிலும் ஒருவர் பிரச்சனையில் மற்றொருவர் தலையிடாமல் டேன்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் தான் பெரியது. அவர்களுக்குள்ளே உட்பூசலை ஏற்படுத்தி தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே குளிர்காய்ந்து வருகிறது.
இதில் இதுவரை ஒற்றுமையாக இருந்த தயாரிப்பாளர்கள் தற்போது போட்டியாக மாறி தயாரிப்பாளர்களும் தங்களுக்குள் சங்கம் என்ற ஒன்றை ஏற்படுத்த அதில் விஜய்யின் அப்பா எஸ்,ஏ. சந்திரசகர் தலைமையில் பெரிய தயாரிப்பாளர்கள் குழுவாகவும், மறுபுறம் கேயார் தலைமையிலான சின்ன தயாரிப்பாளர்கள் அணியும்(சிறிய, பெறிய தயாரிப்பாளர்க்கு இடையில் எவ்வளவு கோடி வித்தியாசமிருக்கும்?) குடுமிப்பிடி சண்டையில் நிற்கின்றன.
துப்பாக்கி பட ரிலீஸின் போது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் அரை க்ரவுண்ட் நிலம் பரிசளிப்பதாகச் சொன்னாரம் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர். அதையும் அவர் சொந்தப் பணத்திலிருந்தே கொடுப்பேன் என்றாராம்.
அப்படிக் கொடுக்க முடியவில்லை என்றால் தூக்குப் போட்டு இறந்து விடுவேன் என்று கூறினாராம் எஸ் ஏ சி.
ஆனால் இன்று வரை அப்படி எதுவும் நிலம் தருவது எதுவும் நடக்கவே இல்லை அத்துடன் தயாரிப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கான பிரச்சனைகள் எதுவும் சரிவர கவனிக்கப்படவும் இல்லை என்கிறார் கேயார் ஆதரவு தயாரிப்பாளர் கே.ராஜன்.
கவுன்சில் தேர்தலில் எஸ் ஏ சி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று ஹை கோர்ட்டில் உத்தரவு கேயார் தரப்பிலிருந்து வாங்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று பணம் நிறையச் செலவழித்து தடையை நீக்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது எஸ் ஏ சியின் குழு.
இதுல நமக்கென்ன சார் ? தயாரிப்பாளர் படம் எடுக்குது. அது ஓடுது. லட்சம் லட்சமா அள்ளுது. குடுமிப்பிடி சண்டை போடுது.
இவுக எடுக்கும் இந்த மாதிரி டப்பா படங்களே பாத்துட்டு விசிலடிச்சுட்டு வெளிய வந்து டாஸ்மாக்கிலே சரக்கடிச்சுட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகுற நாம தான் வாஸ்தவமா தூக்குல தொங்கனும். இல்லியா ?