ஐபிஎல்லில் மக்களிடம் வருடா வருடம் செமத்தையாக கல்லா கட்டிவரும் தெம்பில் அடுத்த விளையாட்டாக சினிமா நட்சத்திரங்கள் பங்குபெற்று விளையாடும், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 3 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ரீலோட் செய்யப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவின் நம்பமுடியாத பிரபல நட்சத்திரங்களின் பங்கேற்புடன் இந்த முறை ரீலோட் செய்யப்பட்ட பதிப்பு இன்னும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) நாட்டின் எட்டு முக்கிய திரைப்படத் தொழில்களான இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகியவற்றை கிரிக்கெட் களத்தில் ஒன்றாகக் கொண்டுவருகிறது.
பார்லே பிஸ்கட்ஸ் லீக்கின் தலைப்பு ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது.
சிசிஎல் லீக் நட்சத்திரங்கள் நிறைந்தது.
மோகன் லால், ராஜ்குமார் சேதுபதி, நாகர்ஜுன் சேதுபதி, ஸ்ரீப்ரியா, ஷாஜி, ஜெய்சன் & மிபு ஆகியோர் கேரள அணியின் இணை உரிமையாளர்களாக
,
மும்பை அணியின் பிராண்ட் அம்பாசிடராக சல்மான் கான்,
தெலுங்கு அணிக்கு வழிகாட்டியாக வெங்கடேஷ்,
பெங்கால் அணியின் உரிமையாளராக போனி கபூர் மற்றும்
மும்பை அணியின் உரிமையாளர் சோகைல் கான்.
அணிகளின் கேப்டன்கள் பின்வருமாறு:
பெங்கால் டைகர்ஸ் – ஜிஷு சென்குப்தா,
மும்பை ஹீரோஸ் – ரித்தேஷ் தேஷ்முக்,
பஞ்சாப் டி ஷேர் – சோனு சூட்,
கர்நாடகா புல்டோசர்ஸ் – கிச்சா சுதீப்,
போஜ்புரி தபாங்ஸ் – மனோஜ் திவாரி,
தெலுங்கு வாரியர்ஸ் – அகில் அக்கினேனி,
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் – குஞ்சாக்கோ போபன் மற்றும்
சென்னை ரைனோஸ் – ஆர்யா.
பிப்ரவரி 18 முதல் ஆரம்பிக்கப்படும் இவ்விளையாட்டு மொத்தம் 19 ஆட்டங்களுடன், வாராவாரம் சனி-ஞாயிறுகளில் மட்டும் நடக்கும் போட்டியாக, மொத்தம் 5 வார சனி-ஞாயிறுகளில் இது நடக்கும்.
கிரிக்கெட் மைதானத்தில் தங்கள் சினிமா ஹீரோக்கள் கிரிக்கெட் விளையாட்டிலும் தங்களின் திறமையைக் காட்டுவதை காண ஆவலுடன் காத்திருக்கும் இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஆச்சரியமாக இருக்கும்.
CCL மீண்டும் ஒரு பெரிய ஆரவாரத்துடன் வருகிறது.
வாரக்கடைசிகளில் நல்லா பொழுது போகும் ஒரு மாசத்துக்கு.