பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து ரசிகர்களின் ஜென்ம சாபல்யங்களைத் தீர்த்த நயன்தாரா இப்போது அஜித்தின் ஆரம்பத்திலும் நடித்து வருகிறார்.
அஜித்தின் ‘ஆரம்பத்தில்’ மீண்டும் பிகினி பார்ட் 2 என்று பார்ட் பார்ட்டாக உடைகளை குறைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் ஆசைகளின் மண் விழுந்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பின் ட்விட்டரில் ட்விட்டிய நயன்ஸ் என்னுடைய குடும்பத்தினரின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். நான் இது போன்று பிகினி உடை அணிந்து நடி(ட)ப்பதில்அவர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே இனி இவ்வாறு நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
‘பிகினிதான் போடப்போவதில்லையே தவிர படத்தில் எனக்கு நல்ல ஆக்ஷன் காட்சிகள் உண்டு. அஜித் சாருடன் நடிப்பது எனக்குப் பிடிக்கும். சினிமாவில் அவரை மாதிரியான மனிதரை நான் பார்த்ததே இல்லை’ (ஐஸ்..ஐஸ்..) என்று சொல்லியிருக்கிறார்.
அவரின் இந்த பிகினி முடிவால் பிகிலாகிப் போன ரசிகர்கள் சிலர் எல்.ஐ.சி மாடியிலிருந்து குதிக்கப் போவதாக நமது பாரதப் பிரதமரை மிரட்டியுள்ளனர் என்று வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்குப் பயந்தே அவர் அமெரிக்கா சென்று ஒபாமாவைக் கலந்தாலோசிக்கச் சென்றதாகத் தகவல் கசிகிறது.