நடிகர்களின் வாரிசுகள் நடிக்க வருவதென்பது சினிமாவில் மிகச் சாதாரணமாக நடந்து வரும் விஷயம். வாரிசு நடிகர்களைப் பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட்டே போடலாம்.
அந்த லிஸ்ட்டில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் மறைந்த நடிகர் ராஜேஷின் மகன் தீபக் ராஜேஷ். பயணங்கள் தொடர்கின்றன என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். அது பற்றி அவரிடம் கேட்டபோது..
‘சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு நீண்டநாட்களாக இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. நிறைய கதைகள் கேட்டும் எனக்கென்று பொருத்தமான கதை கிடைக்காமல் இருந்தேன். பயணங்கள் தொடர்கின்றன கதையைக் கேட்டதும் ஓ.கே என்று தோன்றிவிட்டது. பூஜை போட்டு படத்தை ஆரம்பித்து விட்டோம்.
நல்ல கதை. கேரளாவைச் சேர்ந்தவர் தான் இயக்குனர். அஞ்சனா மேனன் தான் நாயகி. என் தந்தை ராஜேஷூக்கு சினிமாவிலும், சமூகத்திலும் நல்ல பெயர் உண்டு. அந்த இரண்டு பெயர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கிறது. அந்த இடத்தை அடையும் வரை உழைப்பேன். போராடுவேன் ‘ என்கிறார் இவர்.