மிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்கியிருந்தார் ஆதிராஜன்.

அதே படநிறுவனமும் அதே இயக்குநரும் மீண்டும் கைக்கோர்க்கிறார்கள், சிலந்தி – பார்ட் 2 வுக்காக. இப்படம் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் பிரமாண்டமான பட்ஜெட்டில் மிரட்டலான த்ரில்லர் படமாக உருவாகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் சினிமா வில் கலக்கிவரும் மாளவிகா மேனன் மாறுபட்ட கேரக்டரில் நாயகியாக நடிக்கிறார். பல மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இதன் படப்பிடிப்பு கம்போடியா வியட்நாம் நாடுகளிலும் நடைபெற உள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா, மற்றும் காந்தாரா பட ஸ்டைலில் உருவாகும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கு மேல் இடம் பெறுகிறது. பெரிய பட்ஜெட்டில் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகும் “சிலந்தி – 2” , ஆதிராஜன் எழுதி இயக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.