திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்த கையோடு நிக்காவுக்கும் தயாராகிவிட்டார் நஸ்ரியா நஸீம். மாப்பிள்ளை இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசில் தான்.
மலையாளப் பெண் நஸ்ரியாவுக்கு தமிழில் ‘நேரம்’ படம் மூலம் நல்ல நேரம் வந்தது. அப்படியே தொடர்ந்து ராஜாராணி, நையாண்டி போன்ற பெரிய படங்களில் நடித்தும்விட்டார். தற்போது தி.எ.நிக்காவில் ஜெய்யுடன் நடித்திருக்கிறார். படம் இந்த மாதிரி இறுதியில் வெளியாக இருக்கிறது. இன்னும் கையில் இருக்கும் மிச்சம் மீதி ஒப்புக் கொண்டிருக்கும் படங்களையும் விரைந்து நடித்து முடித்துக் கொடுக்க இருக்கிறார்.
பகத் பாசிலும் மலையாளத்தில் முண்ணணி நடிகராக இருந்துவரும் வேளையில் இருபக்க சம்மதத்தோடு இவர்கள் தங்கள் திருமணத்தை அறிவித்திருக்கிறார்கள். பகத் பாசில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்ததும் அவர் அதை மறுத்ததும் சமீபத்தில் நடந்து முடிந்த சம்பவங்கள். ஆகஸ்ட் மாதத்தில் நஸ்ரியா – பகத் திருமணம் நடக்க இருக்கிறதாம்.