படத்தில் லவ்’கீகப் பார்க்கிறாரே இந்தப்பாப்பாவின் பெயர் ரக்ஷா ராஜ். ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தை இயக்கிய யுரேகாவின் அடுத்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தொப்பி’ படத்தின் மூலம் மலையாளக்கரையோரத்திலிருந்து தமிழுக்கு இடம் பெயர்கிறார்.
கொஞ்சம் நயன் தாராவையும், கொஞ்சம் மீரா ஜாஸ்மினையும் கலந்து செய்த கலவை போல இருக்கும் ரக்ஷா யூனிட் மொத்தமும் மிரளும் அளவுக்கு நடிப்பைக்கொட்டுகிறாராம்.
பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற நடனக்கலைகளை கற்றுத்தேர்ந்தவரான ரக்ஷாவுக்கு தமிழ்ப்படங்களில் நடித்து மற்ற மலையாள நடிகைகள் அளவுக்குப்பேர் வாங்கவேண்டும் என்ற பேராசை இருக்கிறதாம்.
‘தமிழ்ல ஒரு வல்லிய சான்ஸ் வராதான்னு வெயிட் பண்ணிட்டே இருந்துச்சி. அப்போ ‘தொப்பி’ பட சான்ஸ் கிட்டியதும் அதை கெட்டியா பிடிச்சி வந்தாச்சி. முதல் படம் இவ்வளவு நல்ல கதை, நல்ல டீம் கிடைச்சதுக்கு ஞான் ரொம்ப லக்கியாக்கும்’ என்கிறார் ரக்ஷா.
நீ லக்கிதான்,,,, நாங்களும் லக்கிதானான்னு படம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிதானே ஆகனும் பக்கி.