நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய முதல் படம் பிரபு சாலமனின் ‘கும்கி’. அந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து இப்போது பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மேற்படி முதல்படம் ரிலீஸாவதற்குள்ளாகவே, நடிகர் விஜய் தயாரிப்பில் புதுமுகம் ஒருவர் இயக்குவதாக இருந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலும் ஒப்பந்தமாகியிருந்தார் விக்ரம் பிரபு. என்ன காரணத்தாலோ
தயாரிக்கும் பணியிலிருந்து விஜய் திடீரென விலகிக்கொள்ள வேறொரு தயாரிப்பாளரின் துணையுடன் அதன்முதல்கட்டப்படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது.புதுமுக இயக்குனரை நம்பி ஷீட்டிங் போன விக்ரமுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த டைரக்டரை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு, விஜயின் தந்தை எஸ்.ஏ.சி. ஸ்டார்ட் கட் ‘ சொல்ல ஆரம்பித்தார்.
சமீப சில வருடங்களில் இப்படி ‘ஸ்டார்ட் கட்’ சொன்னதன் மூலம் ஏகப்பட்ட புதுமுகங்களுக்கு ‘பேக்-அப்’ சொன்னவர் என்ற அடிப்படையில், என்னதான் விஜயின் அப்பா என்றாலும் கூட சற்றும் தயங்காமல், முதல் ஷெட்யூலுக்கு பை சொல்லிவிட்டு சென்னை திரும்பினார்.
இதனால் நின்று போயிருந்த ‘சட்டம் ஒரு இருட்டறையை’ தயாரிப்பாளர் துவக்க நினைக்க, விக்ரம் பிரபுவோ, ’’அந்தப்படத்தில் நடிக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை. எனக்கு பதில் வேறு யாரையாவது போட்டு படத்தை தொடருங்கள்’’ என்று கையெடுத்து கும்பிடுகிறாராம்.
இதைக்கேட்டு விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அடைந்தது சாதா அதிர்ச்சி. விக்ரமின் அப்பா பிரபு அடைந்ததோ பேரதிர்ச்சி. ஏனெனில் 2013- ல் சிவாஜி ஃபிலிம்ஸ்க்கு ஒரு படம் நடித்துத்தர சம்மதித்திருந்தார் விஜய்.
இனி அதை நடக்க விடுவாரா எஸ்.ஏ.சி?