நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இளையதளபதி விஜய் நடித்த ஒரே படம் ‘ஒன்ஸ்மோர்’. தற்கால நடிகர்களில் பலருக்கு சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் விஜய்க்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அது அவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டில் நடைபெற்று வருகிறது.
அன்னை இல்லத்தில் விஜய் போலீஸ் உடையுடன் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இங்குதான் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஒரு அரசியல்வாதியின் வீடாக சிவாஜியின் வீடு படத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுநாள் வரை சிவாஜி மற்றும் பிரபு நடித்த ஒரு சில படங்களின் படப்பிடிப்புகள் மட்டுமே சிவாஜியின் வீட்டில் நடைபெற்றுள்ளன. முதல்முறையாக சிவாஜி குடும்பத்தை சேராத ஒரு நடிகரின் படப்பிடிப்பு இந்த வீட்டில் நடைபெறுவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.