சிம்பு, ராணா, கிஷோர்,குத்துரம்யா என்று பெரிய நட்சத்திரப்பட்டாளங்களுடன், வெற்றிமாறன் தானும் நடிகராக களம் இறங்குவதாக இருந்த ‘வடசென்னை’யை விட்டு சிம்புவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற, கடைசியில் தானும் இடத்தை காலி செய்தார் வெற்றிமாறன்.
வம்புத்தம்பி சிம்புவுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்துவிட்டு, வாழ்க்கை வெறுத்துப்போன வெற்றி, வேறு வழியின்றிமூன்றாவது படத்துக்கு, மூன்றாவது முறையாக தனுஷிடமே தஞ்சமடைந்திருக்கிறார்.
அதே ‘வடசென்னை’ கதையைத்தான் சிம்புவுக்குப் பதில் தனுஷை வைத்து இயக்குகிறீர்களா என்று கேட்டால்,’’ தனுஷை வைத்து இயக்கப்போவது முற்றிலும் புதிய கதை. வடசென்னை கதை கொஞ்ச காலத்துக்கு பரணில் ரெஸ்ட் எடுக்கும். ஆனால், வ.செ.வில் இடம்பெறுவதாக இருந்த,சிம்பு தவிர்த்த, நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருமே புதிய படத்தில் இடம் பெறுகிறார்கள்’’ என்கிறார் வெற்றி.
படத்தை தயாரிக்க இருப்பது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்.