நீங்க ஸ்ருதிஹாசனை கல்யாணம் கட்டிக்கணும்னு ஆசைப்படுறீங்களா..? அப்படின்னா உங்களுக்கு இந்த நியூஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், நேற்று ஜீ டிவியில் ‘சிம்ப்ளி குஷ்பு’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, தனக்கு மிகவும் பிடித்தமானது தாயாக மாறுவது என்றும் தனக்கு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் தாயாகும் நிலை ஒரு பெருமைக்குரியது என்றும் கூறினார்.
மேலும் தனக்கு வரக்கூடிய கணவர் உண்மையானவராகவும், மனிதத்தன்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தனது வருங்கால கணவர் தனக்கு தாய்க்கு தாயாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
நோட் பண்ணிக்கிட்டீங்களா பாஸ்..?