விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய ‘நான்’ படத்தை எடுத்த அதே கூட்டணி இப்போது மீண்டும்’ எமன்’ என்கிற புதியப் படம் மூலம் இணைகின்றனர். ‘சரிதானே எல்லாம் நல்லா தான்யா போய்கிட்டிருக்கு’ என்று பார்த்தால் அப்புறம் தான் தெரிகிறது இதையும் தயாரிப்பது ராஜபக்சேயின் பினாமி நிறுவனமான லைக்கா நிறுவனம்.
லைக்கா நிறுவனத்தின் புதிதாக ஆக்கபூர்வமான தலைமையை ஏற்றிருக்கும் ராஜு மகாலிங்கம் என்பவர் ‘எமன்” படத்தின் கதையை பற்றிக் கூறும் போது ” ‘எமன்’ என்ற தலைப்பு மிகவும் வித்தியாசமான தலைப்புதான். கதையை கேட்ட நொடியே இந்தத் தலைப்புதான் கதைக்கு ஏற்றத் தலைப்பு என்பதை உணர்ந்துக் கொண்டேன். எமன் ஒரு சிவ பக்தர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.இதில் ஒரு சுவராசியமான சம்பவம் என்னவென்றால் இந்தப் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் பகிர்ந்துக் கொள்ளப் பட்ட போது நான் ஒரு சிவன் கோவிலில் தான் இருந்தேன்.” என்று சென்ட்டி மென்டுகளைப் போட்டுத் தாக்கினார்.
‘எமன்’ படப்பிடிப்பு வருகின்ற பத்தாம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடை பெறுகிறது. கமல், ரஜினி, விஜய்யில் ஆரம்பித்து விஜய் ஆண்டனி வரை யாரைக் கேட்டாலும் லைக்கா தான் தயாரிக்கிறது. லைக்காதான் தயாரிக்கிறது என்கிறார்கள். ராஜபக்ஷே தமிழரை அழித்துச் சம்பாதித்த ரத்தப் பணத்தில் நமக்கெல்லாம் பிலிம் காட்டுகிறார்.
மக்களே பாருங்க. நல்லாப் உத்துப் பாருங்க. அவர்களின் பாவங்கள் இந்தப் படங்களால் மறைக்கப்படும்.