`முனி` ,`காஞ்சனா` படங்களில் பேயாக நடித்து ரசிகர்களை பயமுறுத்தியது போதாதென்று தற்போது டாப்லெஸ்சாக நடித்து ஷேம்லெஸ்சாக இந்தியில் களம் இறங்குகிறார் லட்சுமிகரமான நாமம் கொண்ட ராய்லட்சுமி.
2004ம் ஆண்டில் நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ‘ஜூலி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘ஜூலி-2’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் முதன்மை ரோலில் நடிகை லட்சுமி ராய் அலைஸ் ராய் லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தில்தான் கடற்கரை மணலில் வெறும் புத்தகத்தை மறைத்தபடி படுத்துள்ளார் ராய் லட்சுமி. இது இவரது முதல் பாலிவுட் படமாகும். தீபக் சிவதாசினி இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ராய் லட்சுமி, மெல்லிய மேல் ஆடையை கழற்றியபடி பின்புறமாக நின்று போஸ் கொடுத்து பரபரப்பு கிளப்பியுள்ளார் .
தமிழிலும் தான் டாப்லெஸ்சாக நடிக்கத்தயார்தான் என்றாலும், இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் இல்லை என்று போட்டுத்தாக்குகிறார் லட்சுமிராய்.