`புலி` பட ஆடியோ வெளியீட்டு விழாவில்  வழக்கமான தனது அடுக்கு மொழியை அவிழ்த்துவிட்டபிறகு ஏழரை நாட்டுச் சனியன் டி.ஆரின் நடு மண்டையில் ஏறி உட்கார்ந்துகொண்டது. அவர் என்ன செய்தாலும் அதே அடுக்கு மொழியில் அவரை கழுவிக்கழுவி ஊற்றிக் கழுவில் ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார்கள் இணையப்போராளிகள்.

இதோ மகாமகத்தில் குளித்த பாவத்திற்காக இணையத்தில் அவர் ஓட்டப்பட்ட குளியல்கள்

யாரும் எதிர்பார்க்காத அதிசய புலி,

இது குடந்தைக்கு வந்த புலி,
இது குளிக்க வந்த புலி,
இது குளத்துக்கு வந்த புலி,
இது பாவத்த போக்க வந்த புலி,
இது கூட்டத்த கூட்டின புலி,
இது சிரிப்ப காட்டின புலி,
இது மெகந்தி போட்ட புலி,
இது நம்ம பக்கத்து ஊரு புலி,
இது அந்த புலி,
இது இந்த புலி,
இது எந்த புலி,

அடுத்த மகத்துக்கும் கண்டிப்பா வந்து குளி…

இந்த வரிசையில் குளித்த பிறகு டி.ஆருக்கு பிடித்த சளியை மட்டும் ஏனோ விட்டுவிட்டார்கள்.

Related Images: