இண்டஸ்ட்ரியின் தற்போதைய ஹாட்டஸ்ட் டாபிக் விஜய் டி.வி. இளையராவைக் கொண்டு நடத்தப்போகும் `ராஜா ஆயிரம்` நிகழ்ச்சிதான். சுமார் பத்துப்படங்களுக்கு ராஜா வாங்கக்கூடிய சம்பளத்தை ஒரே தொகையாக வழங்கி விஜய் டி.வி.நடத்தப்போகும் இந்நிகழ்ச்சியை தமிழ்த்தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் விரும்பவில்லை.
எடுத்த எடுப்பிலேயே தீர்மானமாகப் போட்டால் ராஜா பிடிவாதமாக நிகழ்ச்சிய நடத்தியே தீருவார் என்று யோசித்தவர்கள் தினமும் இரண்டு மூன்று பேர் வரை அனுப்பி, `நாங்க விஜய் டி.வியை விட பத்து மடங்கு பிரம்மாண்டமா நடத்துறோம். விஜய் டி.வி.கிட்ட வாங்குன அட்வான்ஸைக் கூட நாங்களே திருப்பித்தர்றோம்`என்றெல்லாம் பேசி ராஜாவைக் கலைக்கப்பார்க்கிறார்கள்.
ஆனால் இதற்கு சம்மதம் தராத ராஜா, நிகழ்ச்சியை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் கவுதமுக்கு மிக நீண்ட உரையாடல் தந்து, அதை விஜய் டி.வி.க்கு வழங்கி இருக்கிறார்.
நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசையமைத்த போது கவுதம் மேனன் இசைஞானியை நிறைய விஷயங்களில் பெருமைப்படுத்தியிருக்கிறார். பழைய நினைவுகளை மறக்காத இளையராஜா நேர்காணலை எடுக்க சம்மதம் சொன்னதுடன், ஒரு முழு நாளையும் கவுதம் மேனனிற்கு ஒதுக்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.