கடைசியாக ‘சைத்தான்’ என்றொரு இந்தி வெற்றிப்படம் கொடுத்த பிஜாய் நம்பியார், ஒரே நேரத்தில் இந்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் இயக்கி வரும் படம் ‘டேவிட்’
கோவாவைச் சேர்ந்த மீனவராக விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தில் நம்ம ஜீவாவும் ஒரு குட்டி கேரக்டரில் நடிப்பதாக இருந்தது.
பிஜய் நம்பியார் பெரிய டைரக்டர், நம்முடையது ஒரு சின்ன கேரக்டராக இருந்தாலும், இந்திக்கு ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி அது பயன்படுமே என்று யோசித்து சம்மதித்திருந்த ஜீவாவுக்கு, தன்னுடைய கேரக்டர் தமிழில் மட்டும் தான் இருக்கும். அதே கேரக்டரை இந்திக்கு வேறொருவருக்கு வழங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் தான் தெரிந்ததாம்.
தமிழில் கவுதமுடன்,’நீதானே என் பொன் வசந்தம்’ மிஷ்கினுடன்,’முகமூடி’ ஆகிய பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் வேளையில்,தன்னைவிட மார்க்கெட் டல்லாகிப்போன விக்ரமுடன் ஏன் ஒரு குட்டிக்கேரக்டரில் நடிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன்,’டேவிட்’ படத்தில் இதுவரை ஒரு சீன் கூட கமிட் ஆகாததையும் சாதகமாக்கிக்கொண்டு,மேலும்,இதை ஒட்டி என்ன காரணம் சொல்லி படத்தை விட்டு வெளியேறலாம்’ என்று தனது மனைவியுடன் தீவிரமான டிஷ்கசனில் ஈடுபட்டு வருகிறாராம் ஜீவா.