தமன்னா சினிமாவில் காலெடுத்து வைத்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் சொந்தக் குரலில் பேசவில்லை. பெரும்பாலும் அவருக்கு யாராவது பிண்ணணி குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
தமிழில் முதன் முறையாக அவரே ஒரு படத்திற்கு டப்பிங் பேசப் போகிறார். தமிழ் கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு சோதனை வந்துவிட்டதே என்று எல்லோரும் வருத்தப்பட்டாலும் தமன்னா கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் டமிலில் இளநெஞ்சங்கள் மயங்கிவிடும் என்பதாலேயே டப்பிங் பேசவைத்தாராம் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து, சீனு ராமசாமி இயக்கியிருக்கும் தர்மதுரையில் தான் தமன்னா டப்பிங் பேசி வருகிறார். தானைத் தலைவிகள் குஷ்பூ, நக்மா முதல் மச்சான்ஸ் நமீதா வரை எல்லோரும் பேசிய கொஞ்சு டமில்களை மெய் மறந்து ரசித்த தமிழ் ரசிகர்கள் தமன்னாவுக்கும் நெஞ்சில் ஒரு இடம் தராமலா போய்விடுவார்கள் ?
தைரியமா நீ தமிழ் பேசு தங்கம்மா..