சீமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’ த்ரில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஒரு நாள் நிகழ்வை கதையாக்கியிருக்கும் புதுமுக இயக்குனர் ராம் சுப்பாராமன், இப்படத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 167 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறாராம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபு சாலமன் உட்பட அனைவருமே ‘மைனா’ வுக்குப் பிறகு வரக்கூடிய முக்கியமான தமிழ்ப்படம் இது என்று சொல்லிவைத்தாற்போல் பேசினார்கள்.[ ஏன் சார் ‘மவுன குருவை’ மறந்தீங்க?]
இறுதியில் பேசிய சீமான் ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார்.
‘’நான் புகழேந்தி தங்கராஜின் ‘ உச்சிதனை முகர்ந்தால்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான், இந்த ‘கண்டுபிடி’ படத்துக்கு தம்பி ராம் என்னை அணுகினார். படத்தின் கதையை முழுசாகக்கூட கேட்க நேரமில்லாமல் சுமார் பத்து நிமிடம் மட்டுமே கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டேன். உச்சிதனை முகர்ந்தால்’ படத்திலும் போலீஸ் கேரக்டர் தான். கண்டுபிடி’யிலும் அதே போலீஸ் கேரக்டர் என்றவுடன் புகழேந்தி தங்கராஜ், ‘’தம்பி சினிமா உலகத்தினர் உன்னை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக்கி அழகு பார்க்கின்றனர். ஆனால் அரசியல் தான் உன்னை ஒரு அக்கியூஸ்டாகப் பார்க்கிறது’ என்ற போது அரங்கம் நிறைந்த கைதட்டல்.
‘’சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பே படம் தயாரிக்க முடிவு செய்து 80 கதைகள் வரை கேட்டேன்.எதுவும் செட் ஆகவில்லை.கதை பிடிக்காத பட்சத்தில் கதை சொன்னவருக்கு ஒரு சரவண பவன் காபியோடு வழி அனுப்பி டாடா பை பை சொல்லிவிடுவேன். ஆனால் 81 வதாக கதை சொன்ன ராம் மட்டும் காபி குடித்துவிட்டு கையோடு அட்வான்ஸும் வாங்கினார்.அவர் என்னிடம் சொன்னபடி படப்பிடிப்பை 46 நாட்களில் முடித்தார். ஆனால் நான் தான் ரீ-ரெகார்டிங் பண்ண மட்டுமே 56 நாட்கள் எடுத்துக்கொண்டேன்.
அதாவது நீங்களே புரடியூசரும்ங்கிறதால கண்டபடி இசையமைச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க.