சசிகுமார், லட்சுமி மேனன் நடித்திருக்கும் சுந்தர பாண்டியன் படத்தின் ஆடியோ 26 ஆகஸ்ட் 20102 அன்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இசை N.R. ரகுநந்தன். ரகுநந்தனுக்கு இது மூன்றாவது படம். ஆடியோவில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. கார்க்கி, தாமரை, நா.முத்துக்குமார் மற்றும் மோகன்ராஜன் ஆகியோர் தலா ஒரு பாட்டு எழுதியுள்ளனர்.
‘கொண்டாடும் மனசு’: பாடியிருப்பவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன். ஹீரோவின் அறிமுகப் பாடலாக இருக்குமோ என்று சந்தேகப்படும்படியான வரிகளும், டப்பாங்குத்து இசையும் உறுமி, தப்பு, நாயனம் என்கிற அதற்கான அனைத்து கருவிகளும் வந்து போகின்றன. படத்தில் சசிகுமார் ரஜினி ரசிகராம். பாடல் வரிகளும் ரஜினியின் அறிமுகப் பாடல் வரிகள் போல ‘எங்க பாண்டி.. சிங்கம் தாண்டி..மோதிப் பாரு’ என்கிற ரீதியில். எழுதியிருப்பவர் மோகன் ராஜன். கேட்கலாம் ரகம்.
‘ரெக்கை முளைத்தேன்’: ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியிருப்பது. மெலடி டூயட். கோவாவில் படமாக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. கோவா டைப் இசை. ஏற்கனவே கேட்ட ட்யூன்தான். ஷ்ரேயா கோஷலின் குரல் தனித்து நிற்கிறது. கார்க்கியின் வரிகள் ஆங்காங்கே பளிச். ஆல்பத்திலேயே தேறும் ஒரே பாடலாக இது இருக்கலாம்.
‘நெஞ்சுக்குள்ளே’: கவிஞர் தாமரையின் வரிகளில் சைந்தவி பாடியுள்ள பாடல். மணிரத்னத்தின் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் மழையில் நனைந்தபடி பாடும் அறிமுகப்பாடலின் இன்னொரு வெர்ஷன் மாதிரி உள்ளது. இதுவும் அறிமுகப்பாடலாக இருக்கலாமோ என்பது போல வரிகளும் உள்ளன. சுமார் ரகம்.
‘காதல் வந்து’: ஹரிசரண் பாடியுள்ள நா.முத்துக்குமார் பாடல். காதலின் அருமை பெருமைகளையும் காதல் படுத்தும் பாட்டையும் பற்றிய பாட்டு. சுமார் ரகம்.
மிகுந்த சிரத்தை எடுத்து செய்த இசைக் கோர்வை எதுவும் பாடல்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. ரெடிமேட் ட்யூன்கள். படத்தின் எல்லா பாடல்களும் சும்மா ஒரு முறை கேட்கலாம் ரகம் தான். ஹிட்டாகும் வாய்ப்புக்கள் குறைவு. படம் நன்கு ஓடினால் ரெக்கை முளைத்தேனுக்கு ரெக்கை முளைக்க வாய்ப்பு உண்டு.
பாடல்களை கேட்க இங்கே க்ளிக்குங்கள்.
–ஷாலினி ப்ரபாகர்.
சுந்தரபாண்டியன் – பாடல்கள்
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்திருக்கும் சுந்தர பாண்டியன் படத்தின் ஆடியோ 26 ஆகஸ்ட் 20102 அன்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இசை N.R. ரகுநந்தன். ரகுநந்தனுக்கு இது மூன்றாவது படம். ஆடியோவில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. கார்க்கி, தாமரை, நா.முத்துக்குமார் மற்றும் மோகன்ராஜன் ஆகியோர் தலா ஒரு பாட்டு எழுதியுள்ளனர்.
‘கொண்டாடும் மனசு’: பாடியிருப்பவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன். ஹீரோவின் அறிமுகப் பாடலாக இருக்குமோ என்று சந்தேகப்படும்படியான வரிகளும், டப்பாங்குத்து இசையும் உறுமி, தப்பு, நாயனம் என்கிற அதற்கான அனைத்து கருவிகளும் வந்து போகின்றன. படத்தில் சசிகுமார் ரஜினி ரசிகராம். பாடல் வரிகளும் ரஜினியின் அறிமுகப் பாடல் வரிகள் போல ‘எங்க பாண்டி.. சிங்கம் தாண்டி..மோதிப் பாரு’ என்கிற ரீதியில். எழுதியிருப்பவர் மோகன் ராஜன். கேட்கலாம் ரகம்.
‘ரெக்கை முளைத்தேன்’: ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியிருப்பது. மெலடி டூயட். கோவாவில் படமாக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. கோவா டைப் இசை. ஏற்கனவே கேட்ட ட்யூன்தான். ஷ்ரேயா கோஷலின் குரல் தனித்து நிற்கிறது. கார்க்கியின் வரிகள் ஆங்காங்கே பளிச். ஆல்பத்திலேயே தேறும் ஒரே பாடலாக இது இருக்கலாம்.
‘நெஞ்சுக்குள்ளே’: கவிஞர் தாமரையின் வரிகளில் சைந்தவி பாடியுள்ள பாடல். மணிரத்னத்தின் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் மழையில் நனைந்தபடி பாடும் அறிமுகப்பாடலின் இன்னொரு வெர்ஷன் மாதிரி உள்ளது. இதுவும் அறிமுகப்பாடலாக இருக்கலாமோ என்பது போல வரிகளும் உள்ளன. சுமார் ரகம்.
‘காதல் வந்து’: ஹரிசரண் பாடியுள்ள நா.முத்துக்குமார் பாடல். காதலின் அருமை பெருமைகளையும் காதல் படுத்தும் பாட்டையும் பற்றிய பாட்டு. சுமார் ரகம்.
படத்தின் எல்லா பாடல்களும் ஒரு முறை கேட்கலாம் ரகம் தான். சூப்பர் ஹிட்டாகும் வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. படம் நன்கு ஓடினால் ரெக்கை முளைத்தேனுக்கு ரெக்கை முளைக்க வாய்ப்பு உண்டு.
பாடல்களை கேட்க இங்கே க்ளிக்குங்கள்.
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003488
—ஷாலினி ப்ரபாகர்.