உத்தம வில்லன் ரிலீஸாகி அடுத்து கமலின் பாபநாசம் ரிலீசாகவிருக்கும் நேரத்திலேயே அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் கமல். படத்தின் பெயர் தூங்காவனம்.

இதில் நியூஸ் என்னவென்றால் சதிலீலாவதியில் கோவை சரளாவுடன் ஜோடியாக நடித்த கமல் இப்படத்தில் உமா ரியாஸ்கானுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.  உமா ரியாஸ் இதற்கு முன்பு அன்பே சிவத்தில் கமலுடன் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் பூங்காவனத்தை இயக்கவிருப்பவர் கமலின் அஸிஸ்டென்ட்டான ராஜேஷ். சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் தான் இந்தப்படத்துக்கும் இசையமைப்பாளர்.

கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

Related Images: