பீப் பாடல் சர்ச்சையில் சந்தடி சாக்கில் ராஜாவுக்கு எதிராக தனது வயித்தெரிச்சலைக் கொட்டித்தீர்த்த ஜேம்ஸ் வசந்தனை ராஜா ரசிகர்கள் திட்டித்தீர்க்கவே துவக்கத்தில் தலைமறைவானவர், விஷயம் மிகவும் விபரீதமாகப் போவதை உணர்ந்து சாஷ்டாங்கமாக மன்னிப்புக்கேட்டார்.
அதென்ன விபரீதம்?  இசைஞானம் கொஞ்சம் சுமாராகவே உள்ள ஜேம்ஸ் வசந்தனுக்கு சபலஞானம் சற்று தூக்கலாக இருப்பது ஊரறிந்த உணமை. அது தொடர்பாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க போலீஸ் ஷ்டேசனுக்கெல்லாம் போய்வந்தார்.
தற்போது ராஜாவின் மீது தனது வயித்தெரிச்சலைக்கொட்டியதைத்தொடர்ந்து இணையங்களில் பலரும் இவரது காமக்கதைகளை தோண்டியெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் பீதியடைந்த வசந்தன் நேற்றி  ஒரு மன்னிப்புக் கடிதம் அனுப்பினார். அது இதோ:
உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு,
சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு  அறிக்கை.
இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும்  வைத்துக் கொண்டு  அவதூறான  கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடைய ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதையும் புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!!!
இனி கன்ஃபர்மா உங்களுக்கு முன்னேற்றம் மட்டும்தான் ஜேம்ஸ் வசந்தன்.

Related Images: