வாலு படத்தை அடுத்து சிம்பு பசங்க பாண்டிராஜ் இயக்கியுள்ள இது நம்ம ஆளுவில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். ஒரு வருடமாக பெட்டிக்குள் இருந்த இப்படம் மே 20ல் திரைக்கு வருகிறதாம். கெமிஸ்ட்ரி ஓர்க் அவுட் ஆகாமல் பிரிந்த இந்த ஜோடியின் திரைக் கெமிஸ்ட்ரியை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் நயனுக்கும் சிம்புவுக்கும் டூயட் கூட இருக்கிறது படத்தில். டி.ராஜேந்தரின். சொந்தத் தயாரிப்பான இந்த படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக இம்சை செய்ய வருகிறார்..
இந்தப் படத்துக்கு பைனான்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டதால் பாதியில் நின்றுபோனது. டைரக்டர் பாண்டிராஜ் இதை விட்டுவிட்டு பசங்க-2, கதகளி ஆகிய படங்களையும் இயக்கிவிட்டார். ஆனால் அந்த படங்கள் எப்போதோ வெளியான பிறகும் இன்னும் இது நம்ம ஆளு திரைக்கு வரவில்லை.
சமீபத்தில் வேலைகள் முடிந்து இந்தப் படம் சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.அதில் இந்தப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. தற்போது இது நம்ம ஆளு படம் மே 20துஆம் தேதி வரும் என அறிவிக்கபட்டுள்ளது. பாண்டிராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது.. ‛‛இது நம்ம ஆளு படத்திற்காக காத்திருந்தது போதும், சத்தியமா இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு; என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் படம் மே 20ம் தேதி வெளியாகும் என கூறியிருக்கிறார்.