சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிய மெகா சீரியல் சித்தி. ராதிகா நடித்த சித்தி சீரியலின் அடுத்த பாகம் சன்டிவியில் வெளிவர இருக்கிறது.

சீசன் 2 வாக வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் வரவிருக்கும் இந்த சீரியல் முந்தைய சீரியலின் தொடர்ச்சி கிடையாதாம். இவர் புது சித்தி. இவரை சித்தி என்று விளம்பரத்தில் கூப்பிடும் சிறுமியும் புதுசு. இந்த சித்திக்கு இந்த சீரியலில் ஜோடியாக நடிக்க இருப்பவர் பொன்.வண்ணனாம். சமீபத்தில் நடந்த சன் குடும்ப விழாவில் சித்தியில் நடிக்கப்போகும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்தார் ராதிகா.

பொன் வண்ணன் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக , சரத்குமாருக்கு எதிராக களமிறங்கியவர் தான் பொன் வண்ணன். அவரை முதல் முதலாக சீரியலில் தன்னுடன் ஜோடியாகவும் நடிக்க வைக்கிறார் சித்தி ராதிகா.

சித்தியில் நடித்த ஷில்பா, மகாலெட்சுமி, வாணி ராணி சீரியலில் தேனுவாக நடித்தவர் உட்பட பல அறிந்த தொலைக்காட்சி முகங்கள் நடிக்க இருக்கிறார்கள். மெகா சீரியல் சித்தி தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

Related Images: