முழு நம்பிக்கையோடு பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

 1. முதலில் உங்கள் வீட்டு டிவியை ஆன் செய்யுங்கள். பிடித்த மொழி இசைச் சேனல் எதையாவது வைத்துக் கொள்ளுங்கள். தப்பித்தவறிக் கூட செய்திச் சேனல்களை வைத்து விடாதீர்கள்.
 2. வீட்டில் சம்மட்டி, சுத்தியல் அல்லது கிரைண்டர் கல் எதாவது எடுத்துக் கொள்ளுங்கள்.
 3. ரிமோட்டை வாசலுக்கு வெளியே கல் ஏதாவது இருந்தால் அதன் மீது வைத்து சுத்தியல் அல்லது கிரைண்டர் கல் கொண்டு சுக்கு நூறாக்கி விடுங்கள்.
 4. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறபடியால், வீட்டை தூய்மைப் படுத்துக்கள்.
 5. வீட்டின் பொருட்களை மனதிற்குப் பிடித்தபடி மாற்றி அழகாக அடுக்குங்கள். தேவையற்ற பொருட்களை வெளியேற்றுங்கள்.
 6. புத்தகங்கள் மிக முக்கியமானவை. என்ன என்ன புத்தகங்கள் உள்ளன என்று பாருங்கள். வாங்க வேண்டிய புத்தகங்களைப் பட்டியலிடுங்கள்.
 7. வீட்டில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுங்கள்.
 8. குடும்பத்தினர் அனைவரும் மூன்று வேளைகளிலும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துங்கள்.
 9. இதுவரை குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தாம் செய்ததாகக் கருதும் செய்ய விரும்பும், அடைய விரும்பும் இலக்குகள் பற்றி தனித்தனியே கூறுங்கள். அடைந்த தோல்விகளை குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளுங்கள். அதே முயற்சியைத் தொடர வேண்டுமா வேண்டாமா என அனைவரும் முடிவு செய்ய ஆலோசனை கேளுங்கள். அது வெற்றி பெறும் எனில் யார் யார் என்ன ஆதரவு தரமுடியும் என முன் வந்து கூறுங்கள்.
 10. இதற்கு டிவி இசை தடையாக இருந்தால் டிவியின் மெயின் ஆஃப் செய்து கொள்ளலாம்.
 11. எந்த சராசரி மனிதரும் 500 ஆண்டுகள் வாழப்போவதில்லை எனும் நடைமுறை உண்மையை உணர்ந்து பக்குவத்தோடு குடும்பத்தினரிடம் பேசுங்கள்.
 12. குடும்பத்தின் வெற்றி குடும்ப உறுப்பினர்களின் தனி மனித வெற்றியின் அடிப்படை என்பதை உணருங்கள்.
 13. தமிழர்களின் உணவே மருந்து மருந்தே உணவு எனும் கொள்கையைக் கடைபிடிப்பதற்கான வழிமுறைகளைக் கடைபிடிக்க உறுதி பூணுங்கள்.
 14. சண்டை போட்டுக் கொண்டாலும் கூட குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசிக் கொள்ளுங்கள்.
 15. நல்ல நேர்மறையான நட்புகளோடு பேசுங்கள்.
 16. வாழ்க்கையை சமநிலைத் தன்மைக்குக் கொண்டு வந்து வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
 17. அன்பு செய்யுங்கள்.
 18. தான்மையைக் (தான் சொல்வதும், செய்வதுமே சரி, தான் 100 வீதம் சரியானவர் என்ற மனப்போக்கைக்) கைவிடுங்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருங்கள்.
 19. வெற்றி இலக்காக இருந்தாலும் தோல்விகள் என்பவை அந்த இலக்கை அடைய உதவும் அனுபவங்கள் என்று உணருங்கள்.
 20. உடல், மனம், உயிர் வளப்பயிற்சிகளை வாழ்வியலாக்குங்கள்.

நன்றி.

 • வளர்மெய்யறிவான்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.