ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், நடிகையும், பி.எஸ்.பி.பி பள்ளியின் முதலாளியுமான ஒய்.ஜி. மதுவந்தி அவர்கள் சமீபத்தில் பாரதப்பிரதமர் மோடி அறிவித்த கொரோனா கோ விளக்கேற்றும் வைபவத்தை புகழ்ந்து அதன் அறிவியலை விளக்கி ஒரு பதிவிட்டிருந்தார்.
அதை நெட்டிசன்கள் கலாய் கலாய் என்று கலாய்த்ததில் காண்டான அந்த அம்மணி மோடி அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளுக்கு ஜன்தன் மற்றும் உஜ்வாலா போன்ற திட்டங்கள் மூலம் நிறைய செய்திருக்கிறார் என்கிற புள்ளி விவரங்களை பட்டியலிட்டு ஒரு வீடியோ வெளியிட்டார்.
30 ஆயிரம் கோடில 40% 12 ஆயிரம் கோடிதான் வருது கணக்கு. இந்தம்மா 20 ஆயிரம் கோடின்றாங்க.
20 கோடி ஜன்தன் அக்கௌன்ட் இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதில் ஒரு அக்கௌன்ட்டுக்கு 500 ரூபாய் போட்டுள்ளதாக அரசு சொல்லியிருக்கும் கணககு இது. இந்த அக்கௌண்ட்டுகளில் 45 லட்சம் போலி அக்கௌண்ட்டுகள் என்று 2017ல் கண்டு பிடித்தார்கள். இன்னும் எவ்வளவோ.
தவிர அரசு தரும் இந்த பிச்சாத்து 500 ரூபாய் பணத்தை எப்போ ஏழை மக்கள் எடுக்க முடியும்?
எல்லா எளவும் கூட்டி முடிந்தபின்.
அப்புறம் உஜாலா , உஜ்வாலா ன்னு சொல்ற இந்த கதையெல்லாம் நேரு , இந்திராகாந்தி காலத்தில் இருந்தே இருக்கும் திட்டங்கள்.
மோடி ஐயா வந்ததும் பேரை மாத்தி வெச்சி புது பெயின்ட் அடிச்சு புதுவீடுன்னு சொன்னமாதிரி சொல்லிகிட்டார்.
அவ்ளோதான் இவங்க மக்களை நேசிக்கும் கதை, திரைக்கதை வசனம் எல்லாம்.
மக்களுக்கு பூஜ்யம் தான் அதுவரை.
இதை சற்றும் புரிந்துகொள்ளாத மதுவந்தி புள்ளி விவரங்களை பெரிதாக விளக்குவதோடு தவறாகவும் தகவல்களை தந்துள்ளார்.
அந்த சயின்டிபிக் வீீடியோ கீழே..
மதுவந்தியின் தகவல்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி மை ரைட்ஸ் என்கிற குழுவினர் விளக்கியுள்ள வீடியோ கீழே..