பாபாசாகேப் அம்பேத்கர் தன்னை பார்க்க வந்த ஒருவரிடத்தில் தன் வாழ்வின் லட்சியங்களுக்கு மனைவி ரமாபாய் ஆயிசாகேப்ஆற்றிய பங்கு பற்றி கூறியது இது.
“அவள் மிக துணிச்சல்காரி, அவள் சாமத்தியக்காரி, என் மீது அளவுகடந்து அன்பை வைந்திருந்தவள். ஆனால், நான் அவளுக்கென எதுவும் செய்தது இல்லை.
நான் லண்டனில் படித்துக் கொண்டு இருந்த பொழுது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி
கொண்ட தருணம். என்னுடைய புத்தகங்களை விற்றுத்தான் என் தேவைகளை கவனித்துக்கொண்டேன்.
இங்கு அவள் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தாள். குழந்தைகளுக்குப் பால் வாங்கக் கூட
பணம் இல்லை என்று தந்தி அனுப்பினாள். அந்த தருணத்தில் என்னால் அவளுக்கு பணம் எதுவும் அனுப்ப முடியவில்லை.
அந்த சமயத்தில் எங்கள் கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு விறகு மூட்டையை
தூக்கி சென்று விற்றுவிட்டு, அங்கு இருந்து திரும்ப வரும்பொழுது சாண வறட்டியை தலையில் மீண்டும் சுமந்து கொண்டு கிராமத்திற்கு செல்வாள். அவள் கிராமத்திற்கு தான் சேகரித்த சாண வறட்டிகளை தலையில் சுமந்துகொண்டு வரும்பொழுது.
அவளை பார்த்து எங்கள் தெருவில் வசிக்கும் பெண்கள் ஏளனம் செய்வார்கள், நகைப்பார்கள், எதையும் பொருட்படுத்திக் கொள்ளமாட்டாள். அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து குழந்தைகளை பராமரித்துக்கொள்வாள்.
அவள் மிகவும் சிக்கனக்காரி, அவளுக்கு கணக்கு வழக்கு தெரியாது. நான் ஒரு முறை அவளிடம் 50 ரூபாய் கொடுத்தேன். அதில் 5 ரூபாய் எடுத்து தனியே வைத்துகொண்டாள். மீதம் இருக்க தொகையை சிறிய துணிகளை எடுத்து கொண்டு 1.50 காசு வீதமாய் 30 பொட்டலங்களாக முடித்து வைத்து கொள்வாள். தினம் அதில் ஒரு
பொட்டலத்தை மட்டுமே செலவு செய்வாள் .
இரண்டாம் வட்டமேசை மாநாடு இலண்டனில் முடிந்து நான் இந்தியா திரும்பிய தருணம். நான் நம் மக்களுக்காக தனித்தொகுதியுடன் கூடிய இரட்டை வாக்குரிமையை போராடி வாங்கி வந்தேன்.(Separate settlement along with dual voting rights) அதை எதிர்த்து காந்தியும் அவர் இருந்த காங்கிரஸ் கட்சியும் இங்கே உண்ணாவிரதத்தை தொடங்கிய நேரம்.
காந்தியின் சீடர்கள் எல்லாம் என்னை வந்து சந்தித்து மிரட்டல் விடுத்து வாதம் செய்து கொண்டு இருந்தனர். நான் அவர்களின் மிரட்டல் அச்சுறுத்தலுக்கு எல்லாம் சிறிதும் பணியவில்லை. நான் போராடிப் பெற்ற என் மக்களின் உரிமையை என் உயிரே போனாலும் விட்டுத்தரமாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டேன்.
இதனால் காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபா ( பிஜேபியின் முன்னோடி) ஜாதி இந்துக்கள், காந்தியின் சீடர்கள் மிகவும் அநாகரீகமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இரமாபாய் கடைக்குச் செல்லும் போது மறைந்து இருந்து அவளை தாக்க முயன்றனர். உன்னையும், உன் கணவனையும் கொன்று விடுவோம் என்று அவளை மிரட்டினர். அவள் எதற்கும் அஞ்சாமல் திடமாக அவர்களை எதிர்கொண்டு சாதுர்யமாக அவர்களிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்தாள்.
இதுபோன்ற இன்னும் எத்தனையோ துன்பங்களை அவள் எனக்காக தாங்கிக் கொண்டாள். அவளை காப்பற்ற எவ்வளவோ முயன்றும் என்னால் காப்பாற்ற முடியவில்லை.
“அவள் குடும்ப சுமையை தாங்கி கொண்ட காரணத்தினால்தான்.
என்னால் சமூக சுமையை தாங்கமுடிந்தது”, என்று பாபாசாகேப் கண்ணீர்விட்டு அந்த நபரிடம் கூறினார்”.
தாய் இராமாபாய் அவர்கள் குடும்பத்திற்கு செய்த தியாகத்தால் தான் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் நாட்டு மக்களுக்கு தியாகம் செய்து பல்வேறு உரிமைகளை போராடிப் பெற்றுத்தரமுடிந்தது.
நாம் அத்தகைய உரிமைகளையும் அரசியல் விடுதலையையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறோம் என்றால் அதற்கு பின் ஒருவரின் தியாகம் நிச்சயமாக இருக்கிறது.
ஒரு ஆணின் சாதனைகளுக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அது போல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அளப்பரிய சாதனைகளுக்குப் தியாகத்தாய் ரமாபாய் இருக்கிறார் .
அவரது தியாகத்தை நினைவு நாளை மனமார்ந்த நன்றியோடு நினைவு கூறுவோம்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் மனைவி இரமாபாய் அவர்களின் நினைவு தினம் இன்று .
ஜெய்பீம்..!