புதிய சுற்றுச் சூழல் சட்டம் 2020 எவ்வாறு நாட்டின் சுற்றுப்புறச் சூழலை கார்ப்பரேட் கம்பெனிகள் அழித்து ஒழிக்க வழி செய்கிறது என்பதை விளக்குகிறார் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன்.
1984 ல், போபால் ஆலை விபத்து பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்ட பின்பு தான் மத்திய அரசு விழித்துக் கொண்டு சுற்றுப்புறச் சூழலை காப்பதற்கான சட்டத்தை இயற்றியது.
‘சுற்றுப்புறச் சூழலுக்கு யார் கேடு விளைவித்தாலும், அதை மக்கள் நேரடியாக கேட்கலாம்; கோர்ட்டுக்குப் போகலாம்; வழக்குப் போடலாம்; நியாயம் பெறலாம்’ என்று மக்களுக்கு இருந்த உரிமைகளை இந்தப் புதிய சட்டம் வழங்க மறுக்கிறது.
கார்ப்பரேட் கம்பெனிகள் இஷ்டம் போல இயற்கையை அழித்து ஆலைகள் கட்டலாம், ரோடுகள் போடலாம், பாலங்கள் கட்டலாம். யாரும் கேட்க முடியாது என்கிறது இந்த அநியாயமான புதிய சட்டம்.