கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள கழிவறையில் நடந்த நிகழ்வு இது.

சரணாலயத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தியது. தப்பிக்க ஓடிய நாய் ஜன்னல் வழியாக ஒரு கழிவறைக்குள் நுழைந்தது. அது நுழைந்தவுடன் வெளியில் இருந்து கதவு மூடப்பட்டது. நாயும், நாயின் பின்னால் விரட்டி வந்து நுழைந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சிக்கிக் கொண்டன.

சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் ஒடுங்கி அமைதியாக பதுங்கிக் கொண்டது. குரைக்கக்கூடத் துணியவில்லை. சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்திருந்தாலும் அது நாயைப் பிடித்துத் தின்று, ஒரே பாய்ச்சலில் இரவு உணவு ஆக்கியிருக்கலாம்.

ஆனால் அது அப்படி செய்யவில்லை. அந்த சிறு அறையில் இரண்டு விலங்குகளும் சுமார் 12 மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தன.  சிறுத்தைப்புலியும் அமைதியாக இருந்தது. பின்பு வந்த வனத்துறையினர் சிறுத்தையை ரிமோட் இன்ஜெக்ஷன் துப்பாக்கி (கால்நடை மயக்க மருந்து) மூலம் பிடித்தனர்.

கேள்வி என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக நாயை வேட்டையாடவில்லை? கொன்று தின்னவில்லை??

இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலளித்தனர்: அவர்களின் கருத்துப்படி, ‘வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணரும் திறன் கொண்டவை. அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவைகள் தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும். அந்த துக்கமான சூழலில் வயிற்றுக்கு உணவளிக்கும் அவைகளின் இயல்பான உந்துதல் மறையத் தொடங்குகிறது.

இதே போன்று ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் என்பது தேவை.. பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்…. போன்றவை. இவையெல்லாம் பறிக்கப்படும்போது சுதந்திர வேட்கை என்பது தீவிரமாக எழும்.

சுதந்திரம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் கூட ஏன் தாவரங்கள், பூச்சிகளுக்கும் கூட அவசியமானது. சுதந்திரமற்ற தன்மை என்பது அனைத்து உயிர்களையும் பாதிக்கும் விஷயம்.

சுதந்திரம் பசி, தாகத்தைப் போன்று அடிப்படையான ஒரு உணர்வு.

–வாட்ஸப் பகிர்வு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.